சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Nov 2015

3 நாள் பிரதமர் பொறுப்பை வகித்த சுஷ்மா ஸ்வராஜ்: பரபரப்பு தகவல்கள்!

கடந்த 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வகித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரதமர் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றால்,  அமைச்சரவையில் அவருக்கு அடுத்த நிலையில்  இருப்பவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது  வழக்கம். அண்மையில் பிரதமர் மோடி,  அரசு முறைப் பயணமாக கடந்த 21 ம் தேதி சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவில் இல்லை. அவரும் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு கடந்த 18- ம் தேதியே சென்றிருந்தார். இதன்காரணமாக  பிரதமர் பொறுப்பை வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் கவனித்துள்ளார்.
பின்னர் 23 ம் தேதி(திங்கள்) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சீனாவிலிருந்து இந்தியா திரும்பினார். வந்தவுடன் அவர்  பிரதமர் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் இன்று (புதன்) அதிகாலை பிரதமர் மோடி சிங்கப்பூர், மலேசியா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் முறைப்படி  மோடியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த சூழலில், முதன்முறையாக உள்துறை அமைச்சரும் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரும் இல்லாத நிலையில் முக்கிய  பிரச்னைகளில் முடிவுகள் எடுக்கவும் பிரதமர் பொறுப்பு வகிப்பவருக்கு அதிகாரம் உண்டு. இதற்கான அரசு குறிப்புகள் முக்கிய துறைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த பிறகு மோடி, ராஜ்நாத் சிங் ஆகிய இருவருக்கும் அடுத்த அதிகார மையமாக  நிதியமைச்சர் அருண் ஜெட்லி இது வரை இருந்து வந்தார் என்றும்,  தற்போது  அந்த இடத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கைப்பற்றியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது  கவனிக்கத்தக்கது.    

No comments:

Post a Comment