தனது கல்யாணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை பிரேமலதா இப்படி வறுத்தெடுக்கலாமா எனக் கேட்ட நடிகர் ராமராஜன், "என்னம்மா பிரேமும்மா... இப்படி பண்றீங்களேம்மா..?" என பொதுக்கூட்டத்தில் கிண்டலாக பேசி கலகலப்பூட்டினார்.
அ.தி.மு.கவின் நான்கரை ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தருமபுரியில் நடந்தது. இதில் நடிகர் ராமராஜன், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், வக்ஃபு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன் “ கரும்புத்தோட்டத்துக்குள்ள சிமெண்ட் சாலை போட்டு நடக்குற ஒரே ஆள் ஸ்டாலின்தான். ஷூ போட்டுக்கிட்டு வயலுக்குள்ள இறங்கி யாரை ஏமாத்துற...? முடியலைன்னா வீட்டுக்குள்ளயே இருக்கவேண்டியதுதானே. ஸ்டாலின் போய் தெருவோரக்கடையில தோசை சாப்பிடுகிறாராம். அங்க நீங்க சாப்பிட்ட அந்த தோசை, எங்க அம்மா கொடுத்த இலவச கிரைண்டர்ல ஆட்டினது, அதுக்கு தொட்டுக்கிட்ட சட்னி, எங்க அம்மா கொடுத்த இலவச மிக்ஸியில அரைச்சது. அங்க உட்கார்ந்து வாங்குனீங்களே காத்து அது, எங்க அம்மா கொடுத்த இலவச ஃபேன்ல இருந்து வந்தது. இப்படி எங்க பாத்தாலும் அம்மாவின் சாதனைகள்தான்.
விஜயகாந்த் என்ன பேசுகிறார்னே தெரியமாட்டேங்குது. அவர் மனைவி பிரேமலதா ஏதேதோ பேசுறாங்க. உங்க கல்யாணத்துல தாலி எடுத்துக் கொடுத்தது கருணாநிதி. அவரைப்போய் திட்டலாமா.. என்னம்மா பிரேமும்மா இப்படி பண்றீங்களேம்மா..? தேர்தலைப்பற்றி பேசும்போது மழை வருவதற்கு முன், மழை வருவதற்கு பின் என்று சொல்லலாம்.

நாலரை வருஷமா ஓடி ஒளிஞ்சிருந்தவங்க எல்லாம் இப்பதான் நானும் முதலமைச்சர்னு, நானும் ரவுடிதான் வடிவேலு கணக்கா ஓடி வர்றாங்க. ஆனா அ.தி.மு.க மழை, புயல், வெள்ளம் எதுவந்தாலும் சமாளிக்கும்" என்று முடித்தார்.
அடுத்து பேசிய வக்பு வாரியதலைவர் தமிழ்மகன் உசேன், “தருமபுரிக்கு அய்யாத்துரை நடைபயணம் வந்திருக்கிறார். அய்யாத்துரையா யார் அது என்று கேட்கிறீர்களா..? நம்ம மு.க.ஸ்டாலின்தான். 'முடியட்டும் விடியட்டும்' என்கிறார் ஸ்டாலின். அதன் அர்த்தம் புரியாமல் கருணாநிதியும் அவரை வாழ்த்தி அனுப்புகிறார்” என்றார்.

No comments:
Post a Comment