சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

மழை நீர் சேகரிப்பு: தமிழகத்துக்கு சிங்கப்பூர் கற்றுக் கொடுக்கும் பாடம்!(வீடியோ)

குட்டி நாடான சிங்கப்பூரில் மழை நீர் சேகரிப்பு எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான வீடியோ ஒன்றை, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன.

                  
அதன்படி  வீட்டிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு, அது தெருவில் இருக்கும் கால்வாயில் கலக்கிறது. அதற்காக சாக்கடை கலக்காத மழைநீர் சேகரிப்புக்கு என்றே தனி வாய்க்கால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக சாலைகளையொட்டி பிரமாண்டமான வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில் சேரும் மழை நீர் கால்வாயில் சேகரிக்கப்பட்டு, முறையாக குளங்கள், ஏரிகளில் சென்று சேர்கிறது.
ராக்கெட் கட்டமைக்க தெரிந்த நமக்கு சாக்கடை கால்வாயை கட்டமைக்க தெரியாதா ? என்றும் பொன்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகம் போன்ற மழை மறை மாநிலத்தில் இது போன்ற கால்வாய்களை வெட்டி, குறைந்த பட்சம் மாநகராட்சி பகுதிகளிலாவது மழை நீரை முறையாக சேகரிக்கவும்,  தூர்ந்து போன நீர் நிலைகளை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் எதுவும் சாத்தியமே!

No comments:

Post a Comment