சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

ரஷ்ய விமானத்தை சோடா டின் குண்டால் தகர்த்தோம்: தீவிரவாதிகள் 'பகீர்' தகவல்!

ஒரு சாதாரண சோடா டின்னுக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்து கொண்டு சென்று அதன் மூலம்  ரஷ்ய விமானத்தைத் தகர்த்ததாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த அக்டோபர் 31-ம் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனே அறிவிக்கவும் செய்தனர்.
இதனை தொடக்கத்தில் மறுத்த ரஷ்ய அரசு தற்போது,  விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். இதற்கு பயங்கரவாத தாக்குதலே காரணம் என  தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் ஐ.எஸ்.தீவிரவாதிகள், அந்த விமானம் சோடா டின் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் இவ்வளவு சிறிய சோடா டின்னில் குண்டை வைத்து ஒரு பெரிய விமானத்தை தகர்க்க முடியுமா, சாத்தியம் உள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.
அந்த சோடா டின், சாதாரண பெப்சி, கோக் டின் போல உள்ளது. அந்த டின்னுக்குப் பக்கத்தில் வெடிகுண்டுகளை இணைப்பதற்கான வயர்களையும் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பு. இத்தகவலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment