தமிழக வெள்ள பாதிப்பு குறித்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வீடுகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய ஊடகங்களை விமர்சித்துள்ளார். அதில், "தேசிய ஊடங்களே.. தமிழ்நாட்டில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்ததுதான்.
அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment