சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும்: ரமணன்

லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஊட்டி, கோவை, வால்பாறை, தேனி, மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ரமணன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வீடுகளை சூழ்ந்த மழை நீர் இன்னும் முற்றிலுமாக வடியவில்லை.

இந்நிலையில் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, ''வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவையொட்டி நிலவி வந்த தாழ்வு நிலை மறைந்துவிட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியப்பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். தமிழ்நாடு முழுக்க மழை பெய்யவேண்டுமென்றால் வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வேண்டும்.

தற்போது லட்சத்தீவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள்வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. இதுவரை 39.3 செ.மீ.மழை பெய்துவிட்டது. இந்த வருடம் சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment