“சீக்கட்டி ராஜ்ஜியம்”..
இதுதான் தூங்காவனம் தெலுங்கு வெர்ஷனின் தலைப்பு. படம் எடுக்கும்போதே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படமாக எடுக்கப்பட்டாலும், இன்றுதான் தெலுங்கில் வெளியாகிறது. தீபாவளி அன்று நாகார்ஜுனா-அமலாவின் மகனான அகிலின் முதல் படம் வெளியானதால் சீக்கட்டி ராஜ்ஜியம் தாமதமாக வெளியாகிறது.

பொதுவாகவே கமல் படங்களுக்கு ஆந்திராவில் எதிர்பார்ப்பு இருக்குமென்றாலும், சீக்கட்டி ராஜ்ஜியத்திற்காக ஸ்பெஷல் கவனம் செலுத்தி இருக்கிறார் கமல்ஹாசன். நேற்று இரவு ஹைதராபாத்தில் இருக்கும் பிரசாத் திரையரங்கில் ஆந்திர சினிமா பிரபலங்களுக்காக பீரிமியர் ஷோ நடைபெற்றது. கமல், திரிஷா, பிரகாஷ்ராஜ், மது ஷாலினி, சம்பத், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா என படக்குழுவினர் முழுவதும் ஆஜர்.
முறுக்கு மீசை, நீல நிற ஷெர்வானி என கலக்கல் காம்போவில் கமல்ஹாசன்.. உடன் ஆரஞ்சு நிற சேலையில் கெளதமி. திரண்டிருந்த கூட்டம் “இப்புடு கூட யங்கா உண்ணாரு” என தெலுங்கில் கண் வைத்தது. எல்லோரும் வருவதற்கு முன்பே வந்துவிட்டார் மது ஷாலினி. தரையில் புரண்ட அவரின் கவுனை பத்திரிகையாளர் ஒருவர் மிதித்துவிட பதறிவிட்டார். அதன் பின் அவரை சுற்றி ஆறு அங்குல வட்டத்தில் யாரும் நெருங்கவில்லை. படம் பற்றிய கேள்விக்கு, ’இந்த வாய்ப்பை தனக்கு வாங்கி கொடுத்த பிரியா ஆனந்துக்கு நன்றி’ என முடித்துக் கொண்டார்.
அக்கா தங்கையை போல அட்டகாசமாக வந்திருந்தார்கள் ரகுல் ப்ரீத் சிங்கும், ரெஜினா கெஸெண்ட்ராவும். ஹை ஹீல்ஸ், அட்டகாச ஸ்லீவ்லெஸ் என உடைகளிலும் ஒற்றுமை. “ரெஜி ரெஜி” என அழைத்த ரகுலின் குரலில் அவ்வளவு அந்நியோன்யம். மறைந்துக் கொள்ள வசதியாக தொப்பியுடன் வந்திருந்தார் “நான் ஈ” நானி.
பிரகாஷ்ராஜ் எண்ட்ரிக்கு பத்திரிகையாளர்களே விசில் அடித்தார்கள். சளைக்காமல் போஸ் தந்தவர், ரசிகர்களுடன் செல்ஃபிக்களாக க்ளிக்கி தள்ளினார். இயக்குனர் ராஜேஷ் எம் செல்வாவை பார்த்ததும், சந்தோஷம் பொங்க “ஹக்” செய்தவர், ஒரு நிமிடம் வரை அவரை விடவே இல்லை. கட்டிபிடி வைத்தியமா பாஸ் என கமெண்ட் அடிக்க முடிந்ததே தவிர, அவரை பிடிக்க முடியவே இல்லை.

இயக்குனர் ராஜேஷிடம், “கமலுக்கு நீங்க நடிப்பு சொல்லி தந்ததா ஒரு செய்தி ஓடுச்சே!” என்று கேட்டதற்கு, “அவருக்கு நானா? அடுத்த படம் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காருங்க. அத கெடுத்துடாதீங்க” என வந்திருந்த பிரபலங்களை கவனிக்க ஓடினார்.
நல்ல விளம்பரம், எதிர்பார்ப்பு, கச்சிதமான திரில்லர் என எல்லாம் அமைந்திருப்பதால் நிச்சயம் ஹிட் தான் என்கிறது ஆந்திர மீடியா.
எல்லாம் சரி... தலைப்புக்கான விஷயம் எங்கே என்கிறீர்களா?
நிகழ்ச்சியில் வெள்ளை நிற ஆட்டகாச ஆடையில் கடைசியாக வந்தார் த்ரிஷா. படம் ஹிட் கொடுத்த சந்தோஷம் அவர் முகத்தில் பூரிப்பாக மிளிர்ந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அது மாறியது. காரணம்... ராணா! சரியாக த்ரிஷா வரவேற்பு பகுதியில் இருந்தபோது வந்த ராணாவும் உள்ளே வர அவரை த்ரிஷா எதிர்பார்க்கவில்லை. அவரைக் கண்டதும் த்ரிஷா முகத்திலிருந்த சிரிப்பு மறைய, மறைக்கவே முடியாமல் அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுத்தார். அதுவே பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது. இருவரும் சம்பிரதாய ஹாய்.. ஹலோ சொல்லிய பின் எதிரெதிர் திசைகளில் சென்றுவிட்டார்கள்.
ஹ்ம்ம்..!

No comments:
Post a Comment