சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2015

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் இந்திய இளைஞர்களின் கதி இதுதான்!

 ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் ஆர்வத்தில் செல்லும் இந்திய இளைஞர்களை, போர்த் திறமை இல்லாதவர்கள் என்று கூறி, அவர்களை ஐ.எஸ். அமைப்பினர் இழிவுப்படுத்துவதாகவும்,  பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், இந்திய புலனாய்வு அமைப்பிடம் பகிர்ந்து கொண்ட அறிக்கையில்,  " ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் பல்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டு விட்டனர். இதற்கு காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், சூடான், நைஜீரியா போன்ற தெற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் இளைஞர்கள், போர்த்திறன் இல்லாதவர்கள் என்று கருதி, அவர்களை மனித கேடயங்களாக ஐ.எஸ். இயக்கம் பயன்படுத்துவதுதான்.

அந்த இயக்கத்தில், அரபு நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள்தான் ஐ.எஸ். இயக்கத்தின் போலீஸ் படையில் சேர முடியும். அவர்களுக்குத்தான் அதிக சம்பளம், நவீன ஆயுத வசதி மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை ஒரு சிறிய பாசறையில் மொத்தமாக அடைத்து வைக்கிறார்கள்.

அவர்களுக்கு குறைவான சம்பளமும், தரம் குறைந்த ஆயுதங்களும் வழங்கப்படுகின்றன. அவர்களை ஐ.எஸ். போலீஸ் கண்காணித்தபடியே இருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள். அவர்களுக்கே தெரியாமல், வெடிகுண்டுகளை இயக்கி வெடிக்கச் செய்து விடுகிறார்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment