சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

பெட்ரோல், டயர் திருட்டு, அலுவலக கணினியில் பாலியல் படங்கள் : இது ஐ.நா.சபை ஊழியர்களின் நிலை!

ஐ.நா சபையின் தலைமையகம் நியூயார்க் நகரில் உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. பல்வேறு நாடுகளில், ஐ.நா. சபை அலுவலகங்களில் மொத்தம்  41 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு என்பதால், ஒழுக்கத்தை கடைபிடிக்க ஊழியர்கள் தப்பு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை ஊழியர்களிடையே நடந்த ஒழுங்கீனங்கள், அதனால் நடந்த பணி நீக்கங்கள் குறித்து வெளிப்படையான அறிக்கை  வெளியிடப்படும். 
இந்த ஆண்டில் அதாவது,  கடந்த 2014 -ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் 2015 ஜுன் 30-ம் தேதி  வரை தவறிழைத்ததால், 60 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. சபையில் பணிபுரியும் 4 ஊழியர்கள், தங்களது அலுவலக கணினியில் பாலுறவு படங்களை சேகரித்து வைத்துள்ளனர். சிறார் பாலுறவு படங்களும் அதில் இருந்துள்ளன. அதோடு இந்த படங்களை அலுவலக இமெயிலிலும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.  இது கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர்கள் 4 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்று ஐ.நா. சபை அலுவலக குறிப்பு தெரிவித்துள்ளது. 

இது தவிர, ஐ.நா. சபை ஊழியர் ஒருவர், தன்னுடன் பணி புரியும் மற்றொரு ஊழியரை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் அலுவலக காரில் களை ஏற்றி சென்றதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அலுவலகத்துக்கு சொந்தமான முத்திரைகளை எடுத்து சென்ற ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்துவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அலுவல டயர்களை திருடி விற்ற 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு ஊழியர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இன்னொருவர் முள் கம்பியை திருடியதால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. சபை ஊழியர்களிடையே ஒழுங்கீனங்கள்   அதிகரித்து வருவதால், விதிகளுக்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை பாயும் என ஐ.நா. சபையின் இணையதளத்தில் அதன் செயலாளர் பான் கீ மூன்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment