அண்மையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தரப்பு அணியினர் அமோக வெற்றி பெற்றனர். சரத்குமார் தரப்பு தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முன்னதாக சங்க பொதுச் செயலாளராக இருந்த நடிகர் ராதாரவி எதிர்த்து போட்டியிட்ட விஷால், சிவக்குமார் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். ஒருமையில் பேசியதுடன்... தரக்குறைவாகவும் ராதாரவி திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் இந்த தேர்தல் முடிந்த பின்னரும் நடிகர்களிடையே ஒற்றுமை நிலவுமா? என்ற அச்சமும் மூத்த நடிகர்களிடையே ஏற்பட்டது. அதே வேளையில் தேர்தல் முடிந்த பின்னர் பதவியேற்ற நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள், நடிகர்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று தெரிவித்திருந்தார். தற்போது அதை நிரூபிப்பது போல, நடிகர் விஷால் படத்தில் ராதாரவி நடிக்க உள்ளார்.
புதியதாக தயாரிக்கப்படவுள்ள 'மருது ' என்ற படத்தில்தான் சண்டைக்கோழிகளாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சூரியும் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். நவம்பர் 15ஆம் தேதி படபிடிப்புகள் தொடங்குகின்றன.
எப்படியோ சண்டைக்கோழிகளை' மருது' சமாதானப்படுத்தினால் சரிதான்!

No comments:
Post a Comment