சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்து: ஆய்வு செய்யும் புதிய நடிகர் சங்கம்!

தென்னிந்திய நடிகர் சங்க பயன்பாட்டிற்காக சென்னையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அசல் ஆவணங்களின் நிலை என்ன என்பது குறித்து நாசர் தலைமையிலான புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
 
சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கு 20 கிரவுண்ட் நிலம் உள்ளது. இங்கு அடுக்குமாடி தியேட்டர் வளாகம் கட்டுவது தொடர்பாக சங்கத்தில் கருத்து மோதல் ஏற்பட்டதன் எதிரொலியே, தேர்தலில் விஷால் அணியினர் களம் இறங்கியதோடு வெற்றியும் பெற்றனர். சங்கத்தின் மொத்த வரவு- செலவு கணக்குகளை புதிய நிர்வாகிகள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில், இது தொடர்பான புத்தகங்களை அண்மையில் முன்னாள் தலைவர் சரத்குமார் ஒப்படைத்தார். இதையடுத்து, சங்க சொத்து விவரங்களை புதிய நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, சங்க பயன்பாட்டிற்காக தியாகராயர் நகர் அபியுல்லா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருப்பது தெரியவந்தது. அதன் தற்போதைய மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால் அந்த வீடு யார் பொறுப்பில் உள்ளது, அதன் அசல் ஆவணங்களின் நிலை என்ன என்பது குறித்தும் நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

ஏற்கனவே தியேட்டர் வளாகம் கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சரத்குமார் அறிவித்தார். அது தொடர்பான ஆவணங்கள் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை பெற பதிவுத்துறையை அணுகி உள்ளனர் புதிய நிர்வாகிகள்.


No comments:

Post a Comment