சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்!

ந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி  மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார்.
மொகாலி  மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. விராட் கோலியான் இந்த செயலால் அவர் நெகிழ்ந்து போனார். 

மும்பையில் கடைசியாக நடந்த  5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவிடம் தாறுமாறாக அடி வாங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 438 ரன்கள் எடுத்ததால், இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக்கை திட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுதிர் நாயக், பி.சி.சி.ஐ க்கு புகார் அளித்துள்ளார். 

No comments:

Post a Comment