சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

ஆடி ஷோரூமுக்கு திடீரென்று வந்த கோஹ்லி! 2 கோடி ரூபாய்க்கு ஆடி A8 கார் வாங்கினார்!


 
கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி அசத்தும் டெஸ்ட் கேப்டன் கோஹ்லிக்கு, கார்கள் விஷயத்திலும் ஆடியில் பறப்பதுதான் பிடிக்கும். ஏற்கெனவே R8, Q7 என்று நான்கு ஆடி கார்களுக்கு உரிமையாளரான கோஹ்லி, நேற்று புதிதாக 'A8L W12 குவாட்ரோ' என்னும் பிரீமியம் செடான் சொகுசு கார் வாங்கியிருக்கிறார்.
 
 
 
குர்கானில் உள்ள ஆடி ஷோ ரூமுக்கு, டீ-ஷர்ட்-ஷார்ட்ஸ் என்று கேஷுவலாகத் திடீர்ப் பிரவேசம் செய்த கோஹ்லியைத் திக்குமுக்காடியபடி வரவேற்றனர் ஷோரூம் அதிகாரிகள். தான் ஏற்கெனவே புக் செய்திருந்த ஆடி A8 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டெலிவரி எடுப்பதற்காகத்தான் வந்திருந்தார் கோஹ்லி. ‘‘அவர் திடீரென வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நாங்கள் காரை டெலிவரிக்குத் தயாராக வைத்திருந்தோம். அவர் வந்ததும் டெலிவரி கொடுத்து அசத்திவிட்டோம்!’’ என்று பூரிக்கிறார் ஆடி இந்தியாவின் தலைமை அதிகாரி ஜோ கிங். 
 
கோஹ்லியின் புது ஆடி A8L,  அதிக வீல்பேஸ்களைக் கொண்ட பிரீமியம் கார்களில் ஒன்று. 3,122 மிமீ வீல்பேஸ் கொண்ட இது, 5,267 மிமீ கொண்ட நீ...ளமான கார். அதனால்தான் இதன் பெயரே A8L.
 
L என்பது ‘LONG’ என்பதைக் குறிக்கும். ‘‘இதன் நீளமான வீல் பேஸ் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று’’ என்கிறார் கோஹ்லி.
 
 
 
ஆடி A8-ல் 3.0 லிட்டர் கொண்ட டீசல் மாடல் இருந்தாலும், கோஹ்லி புக் செய்திருப்பது 12 சிலிண்டர்கள், 6,300 சிசி, 494bhp, 62.5kgm கொண்ட பெட்ரோல் இன்ஜின். இதன் டெல்லி ஆன்-ரோடு விலை 2 கோடி ரூபாய்.
 
டெஸ்ட்டிலும் ஆடி அசத்துங்க கோஹ்லி!


No comments:

Post a Comment