சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

கட்டுமான பணிகள் முடிந்து, திறக்கப்படாத குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

நாகை மையப்பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்து குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பதால் நாகை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகையின் மையப்பகுதியான தாமரை குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய், குளத்தை தூர் வாருவதற்காக 9.96 லட்சம், ஓ.என்.ஜி.சி சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டமான பணிகள் கடந்த 20.07.2012 அன்று துவங்கப்பட்டது.
கட்டுமான பணிகள் நடைபெறும்போதே கடந்த 2013ம் சுற்றுவர் இடிந்து விழுந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டு அமைச்சர் ஜெயபால் பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள முடிவுற்ற நிலையில், கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஆய்வு செய்து ''விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா பகுதியும், தாமைரக்குளமும் திறக்கப்படும்'' என்றார்.

தாமைர குளத்தை திறப்பதற்கு முதல்வர் தேதிக்காக காத்திருந்த நிலையில்தான் சுற்றுச்சுவர் கடந்த 30ம் தேதி 60 மீட்டர் தூரம் இடிந்து விழுந்து விட்டது. அதற்கு அடுத்தார்போல், கடந்த 1ம் தேதி மீதமுள்ள 40 மீட்டர் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்து விட்டது.
''நாகை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போதே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை பார்த்து கட்டட காண்ட்ராக்ட்காரர்களை நீக்கிவிட்டு, புதிய காண்ட்ராக்ட்காரரை நியமித்து பணிகளை செய்திருக்க வேண்டும். அதை செய்யாததால்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. திறப்புவிழா நடந்து மக்கள் பயன்பாட்டில் இருக்கும்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருந்தால் பெரும் உயிர் சேதங்ள் ஏற்பட்டிருக்கும்'' என்கிறார்கள் சமூக ஆர்வல்ரகள்.

இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் நாகை நகராட்சி நிர்வாகம்.

No comments:

Post a Comment