சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

'தேசத் துரோகம்... பிரிவினை வாதம்... தப்பே இல்ல!'

'டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப்பாடின கோவனை கைது செய்துட்டாங்க. அவர் மேல தேசத் துரோகம்... பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களை சொல்லி உள்ளே தூக்கிப் போட்டிருக்காங்க.

‘அடப்பாவிங்களா... குடிகெடுக்கிற டாஸ்மாக்கை மூடுனு பாடினது தேசத்துரோகமா... பிரிவினை வாதமா?' னு  பலரும் பதைபதைக்கிறாங்க. தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பேருக்கு இதே உணர்வுதான். இதுல வேடிக்கை என்னன்னா... ஏற்கெனவே இந்த கண்றாவியை தமிழ்நாட்டுல திறந்துவிட்டு, ஆறா ஓடவிட்ட கருணாநிதிகூட, கோவனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்கிறதுதான். இதேமாதிரி நிறைய அரசியல்வாதிங்களும் கடுமையா கண்டனம் தெரிவிச்சிருக்கிறாங்க.
என்ன சொன்னாலும் சரி, 'டாஸ்மாக்கை மூடுனு சொன்னது... கண்டிப்பா தேசத்துரோகம், பிரிவினைவாதத்தை தூண்டுற செயல்ங்கிறதுல சந்தேகமே இல்ல'.

'அடப்பாவி... அம்மாவுக்கு இந்த ஜால்ரா அடிக்கிறானே!' னு கொந்தளிக்கிறீங்களா?

வாயை மூடுங்க... அம்மா எது செஞ்சாலும் அதுல குத்தம் கண்டுபிடிக்கிறதே  இங்க பலபேருக்கும் வாடிக்கையா போச்சு. இது ஒரு ஃபேஷனாவும் ஆகிட்டிருக்கு. ஆன்னா... ஊன்னா... டிவி பொட்டிக்குள்ள பூந்துகிட்டு, விவாதம்கிற பேர்ல அரசாங்கத்தை பொளந்துகட்டுறதே பொழப்பா வெச்சுக்கிட்டிருக்காங்க பலரும்.

மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த ஒரு அரசு, அந்த மக்களை 24 மணி நேரமும் குஜாலா வெச்சுக்கிறதுக்காக டாஸ்மாக்கை தொறந்து வெச்சுருக்கு... இது ஒரு குத்தமா. இதுக்காக முதலமைச்சரை விமர்சிச்சி தெருவுல பாட்டுப்பாடி ஆட்டம் போடுவீங்க... இதை கெவருமெண்ட் வேடிக்கை பார்த்திட்டிருக்கணும்னு நினைக்கறீங்க.
'சரி, டாஸ்மாக்கை மூடச் சொல்றதுல என்ன தேசத்துரோகம் இருக்கு?'னு கேக்கறீங்களா... இப்பத்தான் நீங்க சரியான ஆள். அப்படி வாங்க வழிக்கு. விஷயத்தை விவாதிச்சி ஒரு முடிவுக்கு வருவோம். அதைவிட்டுட்டு, 'கோவனை கைது பண்ணிட்டாங்க... பண்ணிட்டாங்க!'னு ஊரு முழுக்க கூப்பாடு போடாதீங்க.

டாஸ்மாக் மூலமா தேசிய நீரோட்டம் தமிழ்நாட்டுல வெள்ளமா பாய்ஞ்சிக்கிட்டுருக்கு. நம்ம ஊரு சாராய முதலாளிங்களோட சரக்கு மட்டுமில்லாம, பக்கத்துல இருக்கிற ஆந்திரா, கர்நாடகா தாண்டி இந்திய மாநிலங்கள் பலதையும் சேர்ந்த சாராய முதலாளிங்களோட சரக்கும் இங்க ஓடிட்டிருக்கு. அதாவது தேசிய அளவுல இருக்கிற சாராய முதலாளிங்களோட பொக்கிஷ பூமியா இருக்கு தமிழ்நாடு. இப்படியிருக்கிறப்ப, டாஸ்மாக்கை மூடுனு இவர் பாட்டுப்பாடினா, அது தேசவிரோதமா இல்லையா? நீங்களே சொல்லுங்க.
இப்படி பண்ணி, தேசிய நீரோட்டத்துல மூழ்கி முத்தெடுத்துக்கிட்டிருக்கிற தங்கத் தமிழ்நாட்டையும், இங்க வந்து தொழில்பண்ணி தமிழ்குடி மக்களை வாழ வெச்சுக்கிட்டிருக்கிற பிற மாநில முதலாளிங்களையும் மனசு சங்கடப்பட வெச்சு, இது நாளைக்கு, 'தேசியமே வாழ்க்கை, வாழ்க்கையே தேசியம்' னு வாழ்ந்துகிட்டிருக்கிற வடமாநில அரசியல்வாதிங்க காதுக்குப் போய், குறிப்பா நரேந்திர மோடி காதுக்கு போச்சுனா... தமிழ்நாட்டு மேலதானே கோவப்படுவாரு. பிறகு, அவரு பாட்டுக்கு எசகு பிசகா முதலமைச்சர் மேல கோவமாயிட்டாருனா? ஆகக்கூடி எவ்வளவு பெரிய தேசத்துரோகத்தை செய்திருக்காரு கோவன்?

அடுத்தாப்புல பிரிவினை வாதத்துக்கு வர்றேன்.

பொதுவா ஒரு நாடுனு இருந்தா, எப்பவுமே குடிமக்களும், குடிமக்களை வாழ வைக்கிற அரசாங்கமும் ஒண்ணா இருக்கிறதே இல்லை. எதிரும்புதிருமாத்தான் கிடப்பாங்க. ஆனா, இந்த தமிழ்நாட்டுல மட்டும்தான், டாஸ்மாக் மூலமா குடிமக்களும் அரசாங்கமும் பின்னிப் பிணைஞ்சு கிடக்குது. நீ பாட்டுக்கு "டாஸ்மாக்கை மூடு" னு பாடினா... குடி மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் நடுவுல பிரிவினையை உண்டு பண்றதாதானே அர்த்தம். இதுகூட பரவாயில்லை. இப்படி ஒரு பாட்டைப் பாடி, அரசாங்கத்துக்கு கொட்டிக்கொடுக்கிற அந்தக் குடிமகனோட குடும்பத்துலயும் குழப்பத்தை உண்டாக்கி, குடும்பத்தைவிட்டே அவனை பிரிக்கிறது பிரிவினை வாதத்துல வராதா?

அப்புறம் பிரிவினை வாத சட்டத்துல பிடிச்சு போடாம முடக்குவாத சட்டத்துலயா உள்ள போட முடியும்?!

இப்படியெல்லாம் நான் கேட்டா, உங்களுக்கு பொங்க ஆரம்பிச்சுடும்.

'அடப்பாவிங்களா, குடிகெடுக்கிற டாஸ்மாக்குக்கு எதிரா குரல் கொடுக்கிறதை தேசத் துரோகம்'னு சொல்றீங்களே... அப்படினா, கோடி கோடியா கொள்ளையடிச்சு, வெளிநாட்டுல குவிச்சு வெச்சிருக்கிறவனெல்லாம் தேசச்சேவை செய்றவனா?

ஆத்துமணல், தாது மணல், கிரானைட்னு அத்தனையையும் சுரண்டி சுரண்டி கோடி கோடியா சம்பாதிக்கிறவன் செய்றதெல்லாம் தேசச் சேவையா?

நாட்டை ஊழல்ல இருந்து காப்பாத்த அதைச் செய்வோம்... இதைச் செய்வோம். நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு செலுத்த ஒற்றுமையுடன் பாடுபடுவோம்... கருப்புப் பணத்தை கறந்து மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம்னு சொல்லி ஆட்சிக்கு வந்துட்டு... 'மாட்டுக்கறி திங்கறவனை அடிச்சிக் கொல்லு... எதுத்துக் கேக்கறவன் மூஞ்சியில கரிபூசு'னு சொல்றதெல்லாம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துற செயலா?'னு ஆளாளுக்கு கேக்க ஆரம்பிச்சுடுவீங்க.

ஆனா, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்னை மடக்கிட்டதா நினைச்சுக்கிட்டா, நீங்கதான் முட்டாள்.

கோடிகோடியா கொள்ளையடிச்சதாலதான், இன்னிக்கு இந்தியாவே ஒரு வல்லரசு ரேஞ்சுக்கு இருக்கு. வெளிநாட்டுல நம்மளோட கருப்புப் பணம் நிறைய குவிஞ்சுருக்கிறதாலதான், நம்ம நாட்டுக்கே பெருமை. அதனாலதான், மோடி சார்கூட 'கருப்புப் பணத்தைக் கைப்பத்துவோம்'னு இப்பவெல்லாம் சொல்றதே இல்லை.

ஆத்துமணல், தாதுமணல், கிரானைட் இதையெல்லாம் சுரண்டுறதுலதான் நம்ம பெருமையே அடங்கி இருக்கு. இந்த வேலைகளையெல்லாம் செய்யாட்டி, நம்ம அரசியல்வாதிங்களுக்கு பணம் எங்க இருந்துவரும். பிறகு, தேர்தல் நேரத்துல ஓட்டுக்கு ஆயிரம், ஐநூறுனு எப்படி அள்ளிக் கொடுப்பாங்க?

இருக்கிற மாட்டையெல்லாம் கறி சாப்பிடறவங்க காலி பண்ணிட்டா, நாளைக்கு மாட்டுப்பொங்கல் எப்படி கொண்டாட முடியும்?

என்ன... என்னோட எசக்கேள்வியெல்லாம் வகையா இருக்கா... பதில் சொல்ல முடியலைதானே? இதுக்குப் பிறகும் கோவனை கைது பண்ணினது தப்புனு யாராச்சும் பேசினீங்க... செவ்வாய்க் கிரக துரோக வழக்குல சிக்கி சின்னாபின்னமாயிடுவீங்க ஜாக்கிரதை!


No comments:

Post a Comment