சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் அரசியலில் வாழ்வது எப்படி?- சீமான் சொல்லும் காரணம்

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், விஜயகாந்தும் அரசியலில் வாழ்கிறார்கள் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பேச்சை கேட்டால் மற்ற மாநிலங்களில்  தமிழனை கேவலமாக நினைக்க மாட்டார்களா? என்றும் கேட்டுள்ளார். 
 
2016 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம், திருச்சி கீழப்புதூர் அரசமரம் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் 9 பேரை அறிமுகம் செய்து வைத்து பேசிய சீமான், "நாம் தமிழர் இயக்கம்,  அரசியல் மாற்றம் மற்றும் அடிப்படை மாற்றத்தை முன்னெடுக்கிறது.  அடக்குமுறை ஒடுக்குமுறை, தீண்டாமை, மதுஒழிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடி வருகிறது.  கல்வி, மருத்துவம் தடையற்ற மின்சாரம் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும். நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் கனிம வள கொள்ளை, மணல் கொள்ளை நிச்சயம்  தடுக்கப்படுவதோடு,  நீர்வளம் பாதுகாக்கப்படும். 

நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் ஆடு, மாடு மேய்ப்பது அரசு வேலை, தமிழ் படித்தால் உள்ளூரில் வேலை, ஆங்கிலம் மற்றும் பிறமொழி படித்தால் வெளிநாட்டில்தான் வேலை. கல்வி, மருத்துவம் இலவசம். முதலமைச்சர் கூட உள்ளூர் அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பார்க்கணும்.  தனியார் முதலாளிகளால்தான் தரமான கல்வியும், மருத்துவமும் தரமுடியும் என்றால் இந்த ஆட்சி எதுக்கு. கலைத்திட வேண்டியதுதானே?
 
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தடை, கேட்டால் மாடு கஷ்டப்படுதாம். மாடு பிடித்து காயம்படுகின்ற நாங்களே கஷ்டப்படல. நீங்க என்ன கஷ்டப்படுவது. இந்திய ராணுவத்துல குதிரை ஓடுதே, பாலைவனத்தில் ஒட்டகம் பயன்படுத்தப்படுதே, அப்போ குதிரையும், ஒட்டகமும் சிரிச்சிக்கிட்டே போகுதா? கேரளாவில் ஓணம் பண்டிகையில் காட்டிலிருக்கும் யானைகளை வரிசையில் நிற்க வைத்து விழா எடுக்கப்படுதே. அப்போது யானை தானாக வந்து நின்று விடுகிறதா? ஜல்லிக்கட்டுகள் உள்ளவரை சினை ஊசிகளுக்கு வேலையில்லை. காளைகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, காளைகள் மேல் இரக்கப்படுவதுபோல் அத்தனையும் அடிமாடாக அனுப்ப திட்டமிட்டதன் விளைவுதான் ஜல்லிக்கட்டு தடை.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானம் அரசாங்கத்துக்கு போய் சேருகிறது என்றால், டாஸ்மாக் தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு போய் சேருகிறது?.

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால் மற்றவர்கள் வாழ்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் விஜயகாந்தும் அரசியலில் வாழ்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த். அவரது பேச்சை கேட்டால் மற்ற மாநிலங்களில் என்ன நினைப்பார்கள். தமிழனை கேவலமாக நினைக்க மாட்டார்களா?
 
தமிழ்நாட்டில் தெருவுக்கு 4 டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, 200 கார்டுகளுக்கு ஒரு ரேஷன்கடை என்று ஏன் கொண்டு வர முடியாது? அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு என்கிறார்கள். ஆனால் அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இழப்பு எப்படி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்ற நமது உணர்வை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் 50 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  எங்கள் வேட்பாளர்கள் சாதி மதம் கடந்து தமிழனாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு காலம் வரும். அது நாம் தமிழ் கையில்தான்" என்று பேசி முடித்தார். 

No comments:

Post a Comment