சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

பட்டாசு சப்தம்: ஓடிப்போகும் செல்லப்பிராணிகளை இப்படி கண்டுபிடிக்கலாம்!

தீபாவளிக்கு வெடித்து சிதறும் பட்டாசு பலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சிலருக்கு தொல்லைகளை கொடுக்கிறது. பட்டாசு சப்தத்தில் இதய நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதுண்டு. அடுத்து நாய், பூனை, மாடு உள்ளிட்ட விலங்குகள் பட்டாசு சப்தத்துக்கு மிரண்டு ஓடும்.
சில சமயங்களில் இத்தகைய விலங்குகளுக்கு பட்டாசு தீப்பொறியால் காயங்களும் ஏற்படுவதுண்டு. காயமடையும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிப்பிள்பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பு தயாராக இருப்பதாக அதன் நிறுவனர் அருண் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பட்டாசு காரணமாக தெருவில் உள்ள விலங்குகளுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் தீபாவளியின்போது பாதிக்கப்பட்ட விலங்களுக்கு உதவுவதற்காக தனி டீமை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். 2013-ல் 5 நாய்கள், இரண்டு பறவைகள், 3 பூனைகளை மீட்டு சிகிச்சை அளித்தோம். 2014-ல் 20 பூனைகள், 15 நாய்கள், 5 மாடுகளுக்கு சிகிச்சை அளித்தோம்.
இந்த ஆண்டு 20 பேர் கொண்ட தனி டீம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டீமில் உள்ளவர்கள் தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும், தீபாவளிக்குப்பிறகும் சென்னை நகரம் முழுவதும் தயார் நிலையில் இருப்பார்கள். இதற்கென தனி ஹெல்ப் லைன் நம்பர் 98415 88852 உள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மீட்பு  நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு சப்தத்தில் வீட்டை விட்டு ஓடும் உங்களது செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை எளிதில் கண்டுபிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் கழுத்தில் அதன் உரிமையாளர் பெயர், வனவிலங்கின் பெயர், மொபைல் நம்பர் எழுதப்பட்டு இருக்கும். அதன்மூலம் வீட்டை விட்டு ஓடும் செல்லப்பிராணிகளை எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம்" என்றார்.

No comments:

Post a Comment