சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

ரசிகர் மன்ற ஷோ: ரசிகர்களின் வேதனை அறிவாரா அஜித்?

டிகர் அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது வேதாளம் திரைப்படம். அதை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி எடுக்க முடியாமல் வேதனையில் விம்மி வருகிறார்கள் ரசிகர்கள்.
எல்லா முன்னணி நடிகரின் படங்கள் ரிலீசாகும்போதும்,  அவருடைய ரசிகர்களுக்கு என சிறப்பு காட்சிகளை முதல் நாள் ஒதுக்குவார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அந்த காட்சியின் டிக்கெட்டை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் மொத்தமாக வாங்கி,  மாவட்டம் முழுக்க உள்ள கிளை மன்றங்களுக்கு கொடுப்பார்கள். அன்று ஒரு நாள் முழுக்க காலரை தூக்கி விட்டு வலம் வருவார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள். ஆனால் நடிகர் அஜீத்,  ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அவரது ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி தர மறுக்கிறார்கள். மேலும், மற்ற நடிகரின் ரசிகர்கள் சிறப்பு காட்சி எடுத்து வருமானம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாக ஆதங்கப்படுகிறார்கள் அஜித் மன்ற நிர்வாகிகள்.
அஜீத்,  மங்காத்தா படம் வருவதற்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தார். "என் ரசிகர்கள் படம் ரிலீசாகும் போது கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அதற்கு செய்யும் செலவில் எல்லோரும் தங்களுடைய  குடும்பத்தை கவனியுங்கள். அதுதான் என் ரசிகர்கள் எனக்கும் செய்யும் உதவி!" எனக் கூறி,  மன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். ஆனாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து மன்றத்தை நடத்தி வருவதுடன், அவரின் எல்லா படங்களையும் திருவிழா போல் கொண்டாடவும் செய்கின்றனர். அதேபோல் வேதாளம் படத்துக்கும் கட்அவுட் வைத்து பட்டாசு வெடிக்க பரபரப்பாகி வரும் நேரத்தில், ரசிகர் மன்றம் இல்லாத வேதனையும் அவர்களிடம் தெரிகிறது.
அஜித் மன்ற தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் அப்பாஸிடம் இது குறித்து பேசினோம்.
''தன் ரசிகர்களும், அவர்கள் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அண்ணன் ரசிகர் மன்றத்தை கலைத்தார். ஆனாலும், நாங்கள் மன்றத்தை நடத்திகிட்டுதான் வருகிறோம். படம் ரிலீசாகும் நேரத்தில் சிறப்பு காட்சி எடுப்போம். அது எங்களோட உரிமையும் கூட. ஆனால், அண்ணன் மன்றத்தை கலைத்து விட்டதால் தியேட்டர்களில், 'ரசிகர் மன்றம்தான் இப்போது இல்லையே... அப்புறம் எதற்கு ரசிகர் காட்சி?' என எங்களை பார்த்து ஏளனமாக கேட்கிறார்கள். பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு ரசிகர்  காட்சியை கொடுத்து விடுகிறார்கள். நாங்கள் போராடி ரசிகர் காட்சி எடுக்க வேண்டி இருக்கு. அது மட்டுமில்லாமல், வேறு சில நடிகரின் ரசிகர்கள், திரையரங்கில் சிறப்பு காட்சி எடுத்து லாபம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இதெல்லாம் அஜித் ரசிகர்களாகிய எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணன் மன்றத்தை கலைத்தாலும் அவர் பிறந்தநாள் மற்றும் அவர் படம் ரிலீசாகும் போது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக் கன்றுகள் நடுதல் என பல வகைகளில் நாங்கள் உதவி வருகிறோம். ஆனாலும் மன்றம் இல்லாததால், எங்களுக்கு அஜித் ரசிகர் என்ற அங்கீகாரம் இல்லாமல் விம்மி வருகிறோம். இதுதான் தமிழ்நாட்டில் உள்ள அஜித் மன்றங்களோட நிலைமை. அதனால், நாங்கள் வருகிற 22-ம் தேதி தஞ்சையில் அனைத்து அஜித் மன்ற நிர்வாகிகளையும் கூட்ட இருக்கிறோம். அதில் ஆலோசித்து இந்த பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதுடன், மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்துவதற்கு அண்ணன் அஜித்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம்'' என்றார்.
இது குறித்து அனைத்து நடிகர்கள் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ரஜினி கணேசனிடம் பேசினோம். 
" அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவர் மீது பற்றுக் கொண்டு பாசத்தை காட்டுகிறார்கள் ரசிகர்கள். படம் ரிலீசாகும் நேரத்தில், மன்றம் இல்லாதால் அவருடைய ரசிகர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பது இல்லை. வேதாளம் படத்துக்கு கூட ரசிகர் அல்லாத ஒருவருக்கு ரசிகர் காட்சியை கொடுத்து விட்டார்கள். பின்பு எல்லா நடிகர் மன்றமும் ஒருங்கிணைந்து பேசியதில், கூடுதல் தொகை கொடுத்து அஜித் ரசிகர்கள் சிறப்பு காட்சியை வாங்கினார்கள். இதுதான் அஜித் ரசிகர்களின் இன்றைய நிலை. தன் ரசிகர்களுக்கு நல்லது செய்வதற்காக மன்றத்தை கலைத்தார் அஜித். அதுவே அவரது ரசிகர்களுக்கு இப்போது உபத்திரவமாக மாறியுள்ளது. இதை அவர் உடனே கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'தல ரசிகர்களுக்கு தன்மானம்' இருக்கும்'' என்றார்.

ரசிகர்களின் தன்மானம் காப்பாரா தல அஜித்? 

No comments:

Post a Comment