சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

கிரெடிட், டெபிட் கார்டுகள்... பயன்படுத்துங்கள் இப்படி!

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளால் கிடைக்கும் நன்மைகள் நிறைய. ஆனால், பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தினால் அவற்றில் பொதிந்திருக்கும் ஆபத்துகள் நிறைய நிறைய!’’ என்று எச்சரிக்கும் சென்னை, ‘ஃபார்ச்சூன் பிளானர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன், அதைப் பற்றிய விரிவான வழிகாட்டல் தந்தார்!
பில்லிங்... கவனம்!
‘‘பொதுவாக ஒரு வங்கியில் கணக்கை ஆரம்பிக்கும் போதே ஏ.டி.எம் கார்டு என்று சொல்லக்கூடிய டெபிட் கார்டை கொடுத்துவிடு வார்கள். பர்ஸோடு பணத்தை எடுத்துச் செல்லும் ரிஸ்க்கில் இருந்து பாதுகாக்கும் இந்த கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுப்பதுடன், ஷாப் பிங் கட்டணத்தையும் செலுத்தலாம்.
டெபிட் கார்டு பில்லிங் ஸ்லிப்பில் கையெழுத்திடும் போது, பலரும் தொகையை செக் செய்வதில்லை. 100 ரூபாய்க்கு, 1,000 ரூபாய் என்று தவறுதலாகவோ, ஏமாற்றும் நோக்கத்துடனோ உங்கள் பணம் எடுக்கப்பட்டிருக்கலாம்... கவனம்! உங்கள் அக்கவுன்ட்டில் ஒவ்வொரு முறை பணம் செலுத்தப்படும்போதும், டெபிட் கார்டு மூலம் எடுக்கப்படும்போதும், அது குறித்த குறுஞ்செய்தி உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும் வகையில், வங்கியில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிந்து வையுங்கள்.
கிரெடிட் கார்டு... உற்ற நேரத்தில் உதவும் நண்பன்!
கிரெடிட் கார்டு பயன்படுத்தி 15 ஆயிரம் முதல் 15 லட்சம் வரை, ஒருவரின் வருமான வரம்பைப் பொறுத்து குறிப்பிட்ட நாட்கள் அவகாசத்துக்கு வட்டியில்லாத கடன் பெற முடியும். பொருளாக வாங்கினால், நம் வரம்புக்குரிய முழுத் தொகையையும் கடனாகப் பெறமுடியும். பணமாகப் பெற நினைத்தால், 50% மட்டுமே கிடைப்பதுடன் வருடத்துக்கு 18% வட்டித்தொகையும் செலுத்த வேண்டி இருக்கும்.
கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை அதை சரிவரப் பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம். நாம் வாங்கும் பொருளுக்கு 30 முதல் 50 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் கிரெடிட் கார்டு மிகவும் உபயோகமானது. இல்லா விட்டால் கிரெடிட் கார்டு கத்தியைப் போன்றது.
கிரெடிட் கார்டை எதற்கெல்லாம் உபயோக்கிக்கலாம்..?
திடீர் மருத்துவச் செலவு, உறவினர், நண்பரின் திரு மணச் செலவு, ஆஃபரின் கடைசி நாள் போன்ற சந்தர்ப்பங்களில், கையில் பணமில்லாதபோது, கிரெடிட் கார்டை பயன் படுத்திக்கொள்ளலாம். நம் முடைய இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், காஸ் பில், வங்கிக் கடன்கள் போன்றவற்றை கிரெடிட் கார்டின் மூலம் செலுத்தலாம். நாம் மறந்தாலும், தானாக கிரெடிட் கார்டு மூலம் எடுத்துக்கொள்வார்கள், நேரமும் விரயமாகாது.
கிரெடிட் கார்டுக்கு எப்போது நாம் அடிமை ஆகிறோம்?
கிரெடிட் கார்டு வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்திவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், பணம் கட்ட குறிப்பிட்ட தேதியைக் கடந்துவிட்டால், நம் தலை கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பிடியில். முதலில் வங்கியில் குறைந்தபட்ச தொகையைக் கட்டச் சொல்வார்கள். அதாவது, பில் தொகையில் 5%. 10,000 பில் தொகை என்றால், 500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பார்கள். நாமும், ‘அப்பாடி!’ என்று என்று மகிழ்ச்சியோடு 500 கட்டிவிட்டால்... என்ன நடக்கும்? மீதமுள்ள 9,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3% வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். லேட் பேமன்ட் அபராதமும் சேர்ந்துகொள்ளும்.
கிரெடிட் கார்டில் தவிர்க்க வேண்டியவை..!
கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்த்துவிடுங்கள். கார்டு வாங்கும்போது எவ்வித கட்டணங்களும் இல்லை என்று உறுதிசெய்த பிறகே வாங்குங்கள்.
எக்காரணம் கொண்டும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். பணத்தை எடுத்த நாளில் இருந்து வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு, 10,000 ரூபாய் எடுத்தால் 300 ரூபாய் மாதாந்தர வட்டி.
சரியான தேதிக்குள் பணம் செலுத்தத் தவறி னால், மாதந்தோறும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்துவதைவிட, வாங்கிய கடனை மாதாந்தர இ.எம்.ஐ யாக மாற்றிக்கொள்வது சரியாக இருக்கும். இதற்கு 18 - 20% வட்டி செலுத்த வேண்டும்.
மொத்தத்தில், டெபிட், கிரெடிட் கார்டுகளை எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தினால், பலன்கள் பல. சறுக்கினால் ஆபத்துகள் பலப்பல!’’

No comments:

Post a Comment