சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

பத்த வைச்சுட்டியே பரட்டை..! - செம ஜாலி தீபாவளி கலெக்‌ஷன்

தீபாவளி ஜுரம் பற்றிக் கொண்டிருக்கிறது. வாட்ஸ்அப் வாத்தியார்களுக்கு கேட்கவா வேண்டும்? பிரபலங்கள்  பெயரில் வெடி வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கலாட்டா கற்பனை,  வாட்ஸ்அப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. அது இங்கே... 
மோடி வெடி : இந்திய தயாரிப்புதான்.  ஆனால் அமெரிக்கா, அண்டார்டிகா போன்ற வெளி மண்ணில் போய்தான் இது வெடிக்கும். பற்ற வைப்பதற்கு முன் செல்ஃபி எடுத்துக்க மறந்துடாதீங்க.

ஸ்டாலின்  வெடி : இது கேமராவ காட்டுனா தானாவே  வெடிக்கும்.
 
கேப்டன் வெடி : எகிடுதகிடான வெடி.  சில சமயம் தூக்கி அடிச்சுரும். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்

கலைஞர் வெடி : இது வெடித்தவுடன்  கடலில் போய் கட்டுமரமாக மிதக்கும். கடலில் யாராவது தமிழர்கள் தத்தளித்து கொண்டிருந்தால், அதனை பிடித்துக் கொண்டு எளிதாக கரையேறி விடலாம்.

சுப்ரமணியசாமி வெடி : இந்த வெடியைப் பத்தி உலகத்துக்கே தெரியும். அணுகுண்டு மாதிரி வெடிக்கும்னு தோணும்.ஆனால் புஸ்வாணம்தான்!

வைகோ வெடி : இதை பத்தவச்ச உடனே கொஞ்ச நேரம் நடந்து போகும். பின்னர் வெடிக்கிற மாதிரி சவால் விடும். தானாவே அணைஞ்சிடும்.

விஷால் வெடி : இது முதல்ல,  உங்ககிட்ட இருக்குறது திருட்டு வெடியானு சோதித்து பார்க்கும். திருட்டு வெடியா இருந்தால் சிவகாசிக்கே போய் வெடிக்கும்.

டி.ஆர் வெடி: இதுல இருந்து சத்தம் மட்டும்தான் வரும். இந்த வெடிக்கிட்ட மட்டும் பக்கத்துல மற்ற வெடிய பத்த வைக்க கூடாது. அப்படி வசக்சீங்கனா அதையும் வெடிக்காம செஞ்சுரும்.

கார்த்திக் வெடி : யாரும் பத்த வைக்க வேண்டாம். அதுவா போய் எங்காவாது வெடிக்கும்.

இளங்கோவன் வெடி : இந்த வெடிய பத்தவச்சதும் கண்டபடி துள்ளித் துள்ளி போகும்.  பின்னர் எங்காவது மறைவான இடத்துக்கு  போய் புஸ் ஆகிடும்.

வாசன் வெடி : 
இந்த வெடிகிட்ட  ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருக்கும். ஆனா ஃபினிஷிங்.... சந்தேகம்தான்!

No comments:

Post a Comment