சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

பசும்பொன் தேவரையோ நடிகர் திலகத்தையோ இழிவுபடுத்தவில்லை: கோபண்ணா விளக்கம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் நடிகர் திலகத்தை இழிவுபடுத்தி பேசியதாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா இழிவுபடுத்தி விட்டதாக கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புகாரைக் கொடுத்திருந்த 'பசும்பொன் மக்கள் கழக'த்தின் தலைவர் இசக்கிமுத்து, "ஆமாங்க.. பசும்பொன் அய்யாவையும், நடிகர் திலகத்தையும் சத்தியமூர்த்தி பவனில் வைத்து கோபண்ணாவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ரொம்பவும் இழிவா பேசியிருக்காங்க. 29-10-2015 அன்று சத்தியமூர்த்திபவனில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  தொடர்பான விழா ஒன்று நடந்திருக்கிறது. அந்த விழாவில் பேசிய இளங்கோவன், பசும்பொன்னுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வருவது பற்றி அனைவரிடமும் கருத்து கேட்டிருக்கிறார். அப்போது, கோபண்ணா குறுக்கிட்டு, "அவரையெல்லாம் நாடாளுமன்ற எம்.பி.ன்னு சொல்றீங்க. அவருக்கு இங்கிலீசே பேச வராதே" என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இதைக் கேட்டு அங்கிருந்த திருச்சி வேலுச்சாமி, கோபண்ணாவிடம் பசும்பொன் தேவர் பற்றியும், அவர் நேருவிடமே ஆங்கிலத்தில் தர்க்கம் செய்தது பற்றியும் விளக்கியதோடு, ''நீங்கள் பேசியது தவறு, மன்னிப்பு கேளுங்கள்'' என்று சண்டை போட்டிருக்கிறார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணாவை கண்டிக்காமல், திருச்சி வேலுச்சாமியை கண்டித்திருக்கிறார்.
மேலும் நடிகர் திலகத்தையும் இதேப்போன்று அந்த இடத்தில் இழிவுப்படுத்தி பேசி இருக்கிறார். 

ஆகவேதான் பசும்பொன்னாரையும், நடிகர் திலகத்தையும் அவமானப்படுத்தியிருக்கும் கோபண்ணா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். போலீஸ் கமிஷனரும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்'' என்றார்.
இந்நிலையில் இந்த புகாரை அப்படியே மறுக்கிறார் காங்கிரசின் ஆ.கோபண்ணா.
"கிடையவே கிடையாது. பசும்பொன் அய்யாவைப் பற்றியோ, நடிகர் திலகத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட நான் எந்த இடத்திலும் தவறாகப் பேசவில்லை. இந்த குற்றச்சாட்டே அநியாயமான குற்றச்சாட்டு. திருச்சி வேலுச்சாமி, கராத்தே தியாகராஜன் போன்றவர்களின் வேலை இது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது ஏதோ கோபத்தை வைத்துக் கொண்டு, கட்சிக்கு விரோதமாக, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கட்சித்தலைமை ஒருபோதும் அனுமதிக்காது.

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா தொடர்பான சி.டி. வெளியீடுக்குத் தேவையான படங்களை சேகரிப்பது முதல் அத்தனை வேலைகளையும் நான், சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை நிறுவனர் சந்திரசேகரன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர்தான் முன்னின்று நடத்தினோம். அப்படிப்பட்ட எங்களைப் பார்த்து இப்படி அப்பட்டமான ஒரு பொய்க் குற்றச்சாட்டை எப்படித்தான்  சொல்ல முடிகிறதோ தெரியவில்லை. ஆனால், இதன் பின்னணியில் இருப்பது திருச்சி வேலுச்சாமியும், கராத்தே தியாகராஜனும் தான். அவர்கள் இந்த அவதூறுகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என்றார் படபடப்பாக.

No comments:

Post a Comment