சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

சைக்கிளை மறக்கலாம் ஹீரோவை மறக்க முடியுமா?

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சியும் கூட.இந்தியர்களை அவர்களுக்கு தெரியாமலேயே உடற்பயிற்சியில் ஈடுபட வைத்தவை சைக்கிள்கள்.  1990களில் இந்திய சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த சைக்கிள்களில் இந்தியர்களின் ரத்தத்தோடு கலந்தது ஹீரோ சைக்கிள்ஸ்.சாதாரண சைக்கிள் கடையாக தொடங்கப்பட்டு, இன்று பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ள ஹீரோ நிறுவனத்துக்கு பின்னால் ஒரு நிஜ ஹீரோ உள்ளார். அவர்தான் பிரிஜ்மோகன் முஞ்சால்.
1923ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கமலியா என்ற இடத்தில் பிறந்த பிரிஜ்மோகன் முஞ்சால், 1944ஆம் ஆண்டு தனது சகோதரர்களுடன் இணைந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் சாதாரணமாக ஒரு  சைக்கிள் கடையை தொடங்கினார். நேர்மையும் கடுமையான உழைப்பும் கொண்ட இந்த சகோதரர்களுக்கு பிரிவினை வடிவில் பிரச்னை வந்தது. தொடர்ந்து லூதியானாவுக்கு தொழிலை இடம் மாற்றினர். 

வியாபார யுக்தியும் தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட முஞ்சால், ஏழ்மையான இந்தியர்களின் எளிமை வாகனம் சைக்கிள் என்பதை அடையாளம் கண்டு கொண்டார். இதனால் ஒரு சைக்கிள் நிறுவனத்தை தொடங்க வேண்டுமென்பது அவரது கனவாகவே இருந்தது. கடும் முயற்சிக்கு பின், 1956ஆம் ஆண்டு ஹீரோ சைக்கிள் நிறுவனம் உருவானது. 

நேர்மையான வர்த்தக சிந்தனையால் வெகுவிரைவில் இந்திய சைக்கிள் சந்தையின், 48 சதவீதத்தை ஆக்கிரமிக்கும் வகையில் ஹீரா சைக்கிள் நிறுவனத்தின் முன்னேற்றம் இருந்தது. காலத்திற்கேற்ப சைக்கிள்களை  வடிவமைப்பதுடன் ,அவ்வப்போது தேவைப்படும் சிற்சில மாற்றங்களுடன் மக்களை கவரும்  நவீனங்களை புகுத்துவதிலும் முஞ்சால் அபாரத் திறமை கொண்டிருந்தார்.
1975ஆம் ஆண்டு ஹீரோ சைக்கிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு, 7 ஆயிரத்து 500 சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்ததாக இருந்தது. தொடர்ந்து 1986ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம்து 500 சைக்கிள்களை அது உற்பத்தி செய்து கின்னஸ் சாதனையும் படைத்தது. அத்துடன் உலகிலேயே மிகப் பெரிய சைக்கிள் நிறுவனம் என்ற பெருமையையும் ஹீரோ சைக்கிள் நிறுவனம் பெற்றது. 

முஞ்சாலின் தொலை நோக்கு சிந்தனைக்கு மற்றொரு அடையாளம்தான் ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம். ஸ்கூட்டர் காலத்தை மோட்டார் சைக்கிள் காலமாகவும் மாற்றிக் காட்டினார். இதற்கான ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் முஞ்சால் ஒப்பந்தம் செய்து கொண்டார். 1986ஆம் ஆண்டு உருவான ஹீரோ ஹோண்டா நிறுவனமும் இந்திய சந்தையில் 48 சதவீதத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. 
                                           
இத்தனை வெற்றிகளுக்கு பின்னால், முஞ்சால் என்ற தனி மனிதரின் கடும் உழைப்புதான்  இருந்தது. பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஹீரோ ஹோண்டா நிறுவனம் உயர்ந்த பின்னரும் முஞ்சால், தனது தொழிலாளர்களிடம்  மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டில் திருமணம்என்றாலோ  அல்லது டீலர்கள் வீட்டில் திருமணம் நடந்தாலோ முடிந்த வரை கலந்து கொள்வாராம். 

''இந்த எளிமையும் தனது ஊழியர்களை மதிக்கும் குணமும்தான் ஹீரோ  நிறுவனத் தயாரிப்புகளை இந்திய சாலைகளின் சூப்பர் ஹீரோவாக மாற்றிக் காட்டியது  ''என்கிறார் பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ்.

உண்மைதான்..! 

No comments:

Post a Comment