சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

கண்டுகொள்ளப்படாத மதுவிலக்கு பிரசாரம்: தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு இலக்கு!


மது விலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற பிரசாரம் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிலையில், தீபாவளிக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 மதுக்கூடங்களும் (பார்) செயல்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 500 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி அளவிலும், விடுமுறை நாட்களில் ரூ.92 கோடி என்ற அளவிலும் சராசரியாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது, பண்டிகை காலங்களில் மேலும் சில மடங்கு அதிகரித்தே காணப்படும்.

மேலும், மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டதால், மதுபான விலை உயர்ந்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ''கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.230 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தீபாவளியையொட்டி 3 நாள்களுக்கு ரூ.303 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டு தீபாவளி சீசனில் மது விற்பனை அதிகரித்தாலும், விலை உயர்வை வைத்து ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்க வேண்டும்.

ஆனால் ரூ.8 கோடி குறைந்து ரூ.142 கோடிக்கு மட்டுமே விற்பனையானது. அதேபோன்று இந்த ஆண்டும் நடந்துவிட கூடாது என்பதால், மண்டல அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த ஆண்டைவிட 20 முதல் 25 சதவீதம் அதாவது சராசரியாக ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் கூடுதலாகவே மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வெயில் காலங்களில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் ‘பீர்’ வகைகள் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. இதன் விற்பனையையும் தீபாவளி நாட்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், கேட்ட மதுபானம் கிடைப்பதில்லை, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று குடி மகன்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற புகார்களுக்கு, தாலுக்கா வாரியாக தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்" என்றனர்.


No comments:

Post a Comment