சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Nov 2015

தீபாவளி: மகிழ்ச்சியாக ஊருக்குப்போக 10 டிப்ஸ்!

தீபாவளியின் சிறப்பு பட்டாசு மட்டுமல்ல; உற்றார் உறவினர்களை பார்த்து மகிழ்வதும்தான். தொழில் நிமித்தம் சொந்த ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்திருக்கிற மக்கள் குதூகலம் அடைவது விழா நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும்போது மட்டுமே. 
அதே சமயம் ஊருக்கு செல்லும்போது இருக்கிற உற்சாகம், வீடு திரும்புகிறவரை நீடிப்பதற்கான சில அலர்ட் டிப்ஸ்கள் இங்கே...

1)  பயணத்தின்போது உடன் வரும் உங்களின் வயதான பெற்றோர்கள், குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பாராசிட்டமல் மாத்திரை, பஞ்சுத்துணி, இருமல்,சளி மாத்திரைகள் குழந்தைகளுக்கான பேம்பர்ஸ் போன்ற உள்ளாடைகள். அதேப்போன்றே வயதானவர்களுக்கும் சுகர் மாத்திரை, பிரசர் மாத்திரை போன்று ஏதாவது அன்றாடம் உட்கொள்ள வேண்டியவற்றை மறந்துவிட வேண்டாம். 

2).  தீபாவளிக்காக மொத்தமாக சில நாட்கள் விடுமுறை எடுத்து செல்லும்ப்பொது வீட்டின் மீது அதிக கவனம் எடுக்கவேண்டும். பெரும்பாலும் வீட்டில் அதிக நாட்கள் ஆட்கள் இல்லையென்றால் எலிகள் சகஜமாகி உலவும். அதனால் கியாஸ் ஸ்டவ்விற்கும் சிலிண்டருக்குமான பைப் இணைப்பினை பிரித்து சிலிண்டரை தனியே அதற்கான மூடியால் மூடிவிடவும். 

காரணம் என்னதான் சிலிண்டர் தடிமனாக இருந்தாலும், சமயங்களில் எலிகள் பைப்பை கடித்துவிடும். கனமான பைப் எலிகளின் முயற்சியில் சேதம் அடைந்தது தெரியாமல், வீடு திரும்பியதும் நாம் ஸ்டவ் பற்ற வைக்க, சேதாரமான பைப் வழியே கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட வாய்ப்புண்டு

3).
 தொடர் விபத்துக்களால் பேருந்து பயணங்கள் கூட இப்போதெல்லாம் கிலி தர ஆரம்பித்துவிட்டது. ஆகவே தொலை தூர பயணங்களை மேற்கொள்கிறபோது பெரும்பாலும் மத்திய இருக்கையை தேர்வு செய்யுங்கள். 
4). பல மணிநேர பேருந்து பயணத்தில் உங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது சில அத்தியவாசிய பொருட்கள் தேவைப்படலாம். உதாரணத்திற்கு குழந்தை எதிர்பாராதவிதமாக வாந்தி எடுத்தால் சட்டென கேரியர் பை தேவைப்படும். அதுபோன்று குடிநீர், பிஸ்கெட் , பால் , ஃபிளாஸ்க் மற்றும் மருந்து பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். 

5) ஒருவேளை அதிக கைப்பைகள் கொண்டு செல்கிறீர்கள் என்றால் பேருந்தில் அடிக்கடி எடுக்க  வேண்டிய பொருட்களை மொத்தமாக ஒரே பையில் போட்டு, தேவைப்படும் நேரத்திற்கு எடுக்க வசதியாக அருகில் வைத்துக்கொள்ளுங்கள். கூடுமான வரையில் அதிக லக்கேஜ்கள் கொண்டு செல்வதை தவிருங்கள். 

6)
. பயணத்தின் நடுவே குடி நீர், உணவு வாங்குவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துங்கள்.  கொதிக்கவைக்கப்பட்ட நீர், சுத்தமான உணவுப் பண்டங்களையே குழந்தைகளுக்கு வாங்கித்தாருங்கள். சாலையோர  ஓட்டல்களில் பெரும்பாலும் உண்பதை தவிருங்கள்.

7). வீட்டைவிட்டு கிளம்பும்முன் தொலைக்காட்சி மற்றும் எலக்ட்ரானிக் இயந்திரங்களின் மின்வயர் இணைப்பு தொடர்புகளை எடுத்துவிடுங்கள்.எதிர்பாராத மின்னல், இடி போன்ற சமயங்களில் அவை பழுதாகும் அபாயம் உள்ளது.
8).  தீபாவளி ஃபண்ட் போட்டிருக்கிற சிலர் அதில் கிடைக்கும் பட்டாசுகளை உறவினர் வீட்டுப்பிள்ளை களுக்கு பரிசாக தந்து மகிழ்விக்க திட்டம் தீட்டியிருப்பீர்கள். தயவுசெய்து அந்த தவறை செய்துவிடாதீர்கள். சட்டவிரோதம் என்பதால் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகி அநாவசியமாக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியது வரும். 

9).
 மக்கள் அடர்த்தி மிகுந்த இடத்தில் உங்கள் வீடு இருந்தால் பிரச்னையில்லை. சற்று உள்ளடங்கி இருந்தால் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து 2 நாட்கள் உங்கள் வீட்டில் நடமாட்டம் இல்லாமல் இருப்பது தெரிந்தால் மர்மநபர்கள் உங்கள் வீட்டை குறிவைக்கக்கூடும். அதனால் அருகில் வசிக்கும் நம்பிக்கையானவர்களிடம் எச்சரிக்கையாக சொல்லிவையுங்கள். 
உங்கள் பயணத்திட்டம் ஒரு வாரத்தை தாண்டினால் சங்கடப்படாமல் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துவிடுங்கள். அவர்களின் ரோந்துப்பணி வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

10). விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முடிவெடுத்தால் ஒருநாள் முன்னதாகவே கிளம்பிவிடுவது உத்தமம். காரணம் தீபாவளி பொதுவான விடுமுறை என்பதால்,  எல்லோரும் விடுமுறை கடைசிநாளன்றுதான் கிளம்ப முடிவெடுப்பார்கள். அதனால் முறையான போக்குவரத்து வசதியின்றி திண்டாடநேரிடும். 

ரயில் வசதி இருந்தால் கிளம்புகிற நாளன்றே திரும்புவதற்கான டிக்கட் முன்பதிவையும் செய்துவிடுவது பிரச்னையின்றி வீடு வந்துசேர உதவும். இணையத்தில் பதிவு  செய்து எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமல்லாது, தட்கல் மற்றும் சாதாரண முன்பதிவுக்கு கூட  புகைப்பட அடையாள அட்டை கேட்கப்படுவதால், அதனை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


No comments:

Post a Comment