சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jan 2013

விண்டோஸ் முடங்க சில காரணங்கள்




விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில்தொடர்ந்து இயங்க முடியாமல்முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டுஇதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாதுவேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம்அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.
மெமரி மதர்போர்ட் பிரச்னை:

கம்ப்யூட்டர் முடங்கிப் போய்நீல வண்ணத்தில் திரை மாறுவதற்கான காரணங்களில்முதன்மையாக இருப்பதுமெமரி அல்லது மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளேஇதனை Fatal Exception Error என அழைக்கின்றனர்மெமரியில் ஸ்டோர் செய்யப்பட்ட டேட்டாவினைமீண்டும் பெற முடியாத பிரச்னையே இது.

2.
பயாஸ் செட்டிங்ஸ்:
பொதுவாக மதர்போர்டுகள் தயாரிக்கப்படும் இடத்திலேயேஅனைத்து வகை டிஜிட்டல் இயக்கத்திற்கும்இணைப்பிற்கும் தயாராக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் படுகின்றனபெர்சனல் கம்ப்யூட்டரில் அவை இணைக்கப் படுகையில்கம்ப்யூட்டர் தயாரிப்பவரால்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றனபின் தனிநபராகிய பயனாளரால்அவருக்கான பயாஸ் மெமரியில் இவை பதிவு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றனபயாஸ் மெமரியில் பதிவு செய்யப்பட்டவைஅதற்கு மின் சக்தி வழங்கும் சீமாஸ் பேட்டரியின் மூலம் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும்இந்த பேட்டரி தன் சக்தியை இழக்கும் போதுபயாஸ் தன் பழையபேக்டரி செட்டிங்ஸ் நிலைக்குத் திரும்புகிறதுஅப்போதுகம்ப்யூட்டரை வடிவமைத்தவர் மற்றும் பயனாளர் அமைத்த செட்டிங்ஸ் இல்லாமல்கம்ப்யூட்டர் மதர்போர்டுக்கும்இணைக்கப் பட்டுள்ள சாதனங்களுக்கும் இடையே இயக்க பிரச்னை ஏற்படுகிறதுமேலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில்முதலில் சிடி அல்லது யு.எஸ்.பிட்ரைவில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தேடி இயங்கட்டும் என செட்டிங்ஸ் அமைத்துஅவற்றில் சிஸ்டம் இல்லை என்றாலும்கம்ப்யூட்டர் பூட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.

3.
விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி:
கம்ப்யூட்டர் இயக்கம் முழுமைக்குமான குறியீட்டு வரிகள் எழுதப்பட்டுள்ள தொகுப்பே விண்டோஸ் ரெஜிஸ்ட்ரிஇப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில்ரெஜிஸ்ட்ரி தொகுப்பில் முன்பு போல பிரச்னை ஏற்படுவதில்லைஇருப்பினும்இதன் குறியீட்டு வரிகளில் சிக்கல் ஏற்பட்டால்விண்டோஸ் இயக்கம் தொடங்குவதிலும்தொடர்ந்து இயங்குவதிலும் பிரச்னை ஏற்படும்இவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால்சரி செய்வதற்கென பல சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கின்றனஇவை Registry Fix Software என அழைக்கப்படுகின்றனஇவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்விண்டோஸ் சரியாக இயங்கவில்லை எனில்அதனைப் பாதுகாப்பான வழியான சேப் மோடில் (Safe Mode) இயக்கிஅதிலிருந்தே புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.

4.
மாறிப் போன ட்ரைவர்கள்:
ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என கட்டளை கொடுப்பவை ட்ரைவர் புரோகிராம்களாகும்அவை சரியாக இயங்கவில்லை என்றால்நிச்சயம் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம்இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகையில்நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் (Error Message) கிடைக்கும்இந்த பிழைச் செய்தியில் எங்கு பிரச்னை உள்ளது எனக் காட்டப்படும்இது புரியவில்லை என்றால்அதனை அப்படியே காப்பி செய்துகூகுள் தேடல் தளத்தில் ஒட்டி தேடினால்அந்த பிரச்னை குறித்த விளக்கமும்அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் என்ற வழிகாட்டலும் கிடைக்கும்அதனைப் பின்பற்றலாம்பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டால்குறிப்பிட்ட ட்ரைவர் புரோகிராமினைசிஸ்டத்திலிருந்து நீக்கிமீண்டும் அதன் மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைப் பதிவது சரியான தீர்வாகும்.


5. 
ஹார்ட் ட்ரைவ் தரும் பிரச்னை:
ஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால்விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும்பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டுஉங்கள் கம்ப்யூட்டர்ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில்இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும்பொதுவாகஇவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான்ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும்இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள்இணையதளங்களில் கிடைக்கின்றனஇவற்றைப் பயன்படுத்திசோதனை செய்துகிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால்உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள்எப்படியாவது சரி செய்துஅதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டுட்ரைவினை அழித்துவிடுவதே நல்லதுஅதற்கு முன்அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து , இயக்கிப் பார்க்கலாம்அதில் சரியாக இயங்கினால்மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம்ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால்பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

6.
வைரஸ் அல்லது மால்வேர்:
ஒரு வைரஸ் அல்லது மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கெடுக்கும் புரோகிராம்களும்கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்இவை ட்ரைவர் புரோகிராம்களைக் கெடுக்கலாம்அல்லது நீக்கலாம்முக்கியமான சிஸ்டம் பைல்களை அழிக்கலாம்அல்லது கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிர்வகிக்க நாம் அமைத்திருக்கும் செட்டிங்குகளை மாற்றலாம்இவை எல்லாமே நாம் எதிர்பாராத நேரத்தில்கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்.
வெளிப்படையாக ஓர் உண்மையைச் சொல்வதென்றால்ஒரு மால்வேர் புரோகிராம் இருப்பதனை அறியும் போதேஅதற்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்து நிற்கிறோம்உங்கள் சிஸ்டத்தினை அது கைப்பற்றிவிட்ட நேரத்திலிருந்துவழக்கமாக நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னைகளை அறிய நாம் மேற்கொள்ளும் வழிகளும் அடைப்பட்டுப்போகின்றனஎனவேபுதியதாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினைடவுண்லோட் செய்து அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்றுஇன்ஸ்டால் செய்து இயக்கி அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்என்ன செய்தும் அதனை நீக்க இயலவில்லை என்றால்ட்ரைவில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுத்துவிட்டுஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்துவிண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் பதிக்க வேண்டியதுதான்இதனால் தான்ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைஅவ்வப்போது மேம்படுத்த வேண்டும் என்றும்சரியான பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும் என்றும்நம் டேட்டா பைல்களை அவ்வப்போது பேக் அப் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

7. 
மின்சக்தி பிரச்னை:
மேலே சொல்லப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால்கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் மின்சக்தி ஓட்டத்தில் பிரச்னை இருக்கலாம்போதுமான மின்சக்தி இல்லாத நிலைசமநிலையில் மின் ஓட்டம் கிடைக்கப்பெறாத சூழ்நிலை என இதற்குப் பல காரணங்கள் உள்ளனமுழுமையாக நமக்கு மின்சக்தி வழங்கும் பாதையினைச் சோதனை செய்து குறைகளை நீக்க வேண்டும்.

8. 
சாப்ட்வேர் பிரச்னை:
பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம் களால் விண்டோஸ் முடக்கப்படும் நிகழ்வு ஏற்படாதுமிக அரிதான வேளைகளில் இது ஏற்படலாம்குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கும்போது மட்டும்விண்டோஸ் இயக்கம் நின்று போகிறது என்பதனைக் கண்டறிந்தால்அந்த சாப்ட்வேர் புரோகிராமினை நீக்கிமீண்டும் பதிவதன் மூலம் இதனைச் சரி செய்திடலாம்.

9. 
அதிக வெப்பம்:
கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் உறுப்புகள் இயங்குகையில் வெப்பம் உண்டாகும்இதனை நீக்கிட சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டாலும்முழுமையாக வெப்பத்திலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களைக் காப்பாற்ற இயலாதுசில வேளைகளில் இதனாலும் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகலாம்இதனை உணரும் பட்சத்தில்கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிறுத்திவெப்பம் முழுமையாக நீங்கிய பின்னர் இயக்கிப் பார்க்கலாம்வெப்பக் காற்று வெளியேறும் வழிகளில் தூசு படிந்திருந்தால் நீக்கலாம்மின்விசிறிகள் முழுமையாக இயங்குகின்றனவா எனச் சரி பார்த்துபுதியனவற்றை அமைக்கலாம்பொதுவாக விண்டோஸ் இயக்கம் முடக்கப்பட்டவுடன்நம்மை பதற்றம் தொற்றிக் கொள்ளும்அதனை விடுத்துபொறுமையாகக் காரணத்தை ஆய்வு செய்தாலேபாதி வெற்றியை நாம் அடையலாம்மேலோ சொன்ன வழிகளில் நிச்சயம் ஒன்று காரணமாக இருக்கும்அதற்கேற்ற தீர்வினை மேற்கொள்வது நல்லது.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment