சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jan 2013

நிலத்தடி நீருக்கும் வரி - மத்திய அரசு


ண்ணீருக்கு விலைவைப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்’ - இப்படி திருவாய் மலர்ந்தார் நமது நிதி அமைச்சர் .சிதம்பரம். இது அவரது சொந்தக் கருத்து அல்ல. உலக வங்கியின்; உலக வர்த்தகக் கழகத்தின்; சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து. உலகின் இயற்கை வளங்களை எல்லாம் லாப வெறியுடன் சூறையாடி முடித்துவிட்ட இவர்களின் குறி, இப்போது தண்ணீர்

      ஏற்கெனவே தென் ஆப்பிரிக்​காவில் தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டது. உங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், உங்கள் அக்கவுன்ட்டை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். அக்கவுன்ட்டில் பணம் இருக்கும் வரை, குழாயில் தண்ணீர் வரும். அக்கவுன்ட்டில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், தண்ணீர் பாதியில் நின்றுவிடும். அடுத்து எப்போது டாப்-அப் செய்கிறீர்களோ, அப்போது​தான் தண்ணீர். 'குடிக்கத் தண்ணீர் வாங்கக் காசு இல்லாதவன் எல்​லாம் எதுக்கு உயிர் வாழ​ணும்?’ என்பதுதான் உலக​மயத்தின் கருத்து. இப்போது .சிதம்பரத்தின் கருத்தும்கூட.

      நீங்க வாழ்நாள் முழுவதும் உழைத்து  வாங்கிய வீடாக இருக்கட்டும் அல்லது பரம்பரை வீடாக இருக்கட்டும் அதற்க்கு வீட்டு வரி, சொத்து வரி ,என வருடந்தோறும் அரசுக்கு கட்டுகிறீர்கள்.அதே போல நகரம் மற்றும் கிராமங்களில் இருப்பவர்கள் குடிநீர் வரி மாதந்தோறும் அரசின் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்  கட்டுகிறீர்கள்.குடிநீர் போதிய அளவு கிடைக்கிறதா?இல்லை. ஒரு வாகனம் வாங்கும் போது  பாதை வரி ( ROAD TAX ) கட்டுகிறீர்கள்.இதுவரை நல்ல பாதையில் போயிருக்கின்களா?இல்லை இப்படி மக்களிடம் வரியை வாங்கி கொண்டு அயராது உழைத்த இந்த அரசாங்கம் மேலும் மக்களுக்காக உழைக்க இன்னொரு வரியை அறிமுகபடுத்தியுள்ளது அதுதான்  உங்களுக்கு சொந்தமான நிலத்தின் அடியிலுள்ள நீருக்கும் நீங்கள் அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும்.எப்படியெல்லாம் யோசிக்கிராணுக?

           நீர் என்பது இயற்கையின் வரபிரசாதம்.எவனும் தன் முயற்சியால் உருவாக்கியதல்ல.அதற்க்கு ஏன் ஒருவர் பணம் கொடுக்க வேண்டும்? உங்கள் வீட்டில் வளரும் காய்கறிகளை நீங்கள் பயன்படுத்த அரசுக்கு வரி செலுத்த வேண்டுமா? இப்போது வரை அரசுக்கு எவ்வளவு பணம் வரி செலுத்தியிருப்பீர்கள்? உங்களுக்கு எல்லா சலுகைகளும் கிடைத்துவிட்டதா?

      இது எல்லாம் அமெரிக்கா,பிரிட்டன்,போன்ற பணக்கார நாடுகளின் தந்திரம்.உலகின் அனைத்து இயற்கை வளங்களையும் அதிகம் பயன்படுத்துவது ( பெட்ரோல்,டீசல்,எரிவாயு ) அமெரிக்கா தான்.அதனால் தான்  தன் அதிகாரத்தை பயன்படுத்தி  மற்ற நாடுகளுக்கு கடன் கொடுக்கும் உலக வங்கியை இப்படி ஒரு வரியை போட நிர்பந்திக்கிறது.இந்தியாவில் உள்ள தைரியமில்லாத, கோழைத்தனமான  இத்தாளிகாரியின் அரசும், அதன் தஞ்சாவூர் பொம்மைகளும் தலையாட்டுகின்றனர்.


   மத்திய அரசு, தண்ணீரைத் தனியார்மயமாக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. 'தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012’ என்ற திட்ட வரைவை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.

      இந்தியாவில் மிகவும் அடி​மட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர். இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்ன திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலு​வாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தண்ணீரின் மீதான மனிதனின் உரிமை என்பது எந்த அரசாங்கமும் சட்டமும் வழங்கியது அல்ல. அது இயற்கை நமக்கு வழங்கிய, பிரிக்க இயலாத உரிமை. ஆனால், 'நிலத்தடி நீரின் மீது நில உரிமை​யாளருக்கு உரிமை இல்லை என்கிறது புதிய வரைவுக் கொள்கை. மின்சாரம் போலவே தண்ணீருக்கும் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் சொல்​கிறது.

       ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், உலகம் எங்கும் ஐந்து வயதுக்கு குறைவான 21 லட்சம் குழந்தைகள் இறந்துபோகிறார்கள். எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களால் கொல்லப்​படுபவர்களின் எண்ணிக்கையைவிட, குடிநீர் பிரச்னையால் கொல்லப்படுபவர்கள் அதிகம். .நா-வின் கணக்குப்படி, உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்​குறையால் அவதிப்படுகின்றனர். இப்போது வரை மூன்றாம் உலகப்போர் வந்தால் அது பெட்ரோலுக்காக தான் என அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் அது தண்ணீருக்காகத்தான்  எனும் காலம் வெகுதொலைவில் தான் உள்ளது

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment