சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jan 2013

‎"நடந்தால் நாடெல்லாம் உறவு...!"


 
 ‎"நடந்தால் நாடெல்லாம் உறவு...!"

என்று ஒரு பழமொழியை சொல்லிவைத்தார்கள்... உலக ஞானம் நமக்கு தேவை. உலகத்தில் உள்ளவர்கள் எப்படியெப்படி எல்லாம் வாழ்க்கை நடத்துகிறார்கள்? நாம் எப்படி வாழ்க்கையை நடத்துகிறோம்? என்றெல்லாம் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்..,

தனிமரம் தோப்பாகாது.! ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது.! பல பேருடன் பழக்கம் வைத்துகொண்டிருந்தால் தான் காரியம் சாதித்துகொள்ளலாம். பெரிய நகரங்களுக்கு நாம் செல்லும்போது அங்கு யாராவது நமக்கு இருக்கிறார்களா? என்று யோசித்து பார்ப்போம். அவர்களின் முகவரியை, தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு செல்வோம். அப்பொழுதுதான் அவர்கள் மூலமாக அந்த நகரத்தில் நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை துரிதமாக செய்து கொள்ள இயலும்.

முன்பின் தெரியாத ஒரு நகரத்திற்கு நாம் சென்று ஒரு காரியம் சாதிக்க வேண்டுமானால் பேச்சாற்றல், திறமை நமக்கு வேண்டும். இல்லையேல் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்.

எனவே நாம் வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் வெளிவட்டார பழக்க, வழக்கத்தை விரிவு செய்து கொள்ள வேண்டும். 

நடந்து சென்றால் பழருடன் நாம் பழக முடியும். பல ஊர்களுக்கு நிகழ்ச்சிகள் வைத்து அழைக்கும் போது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சென்று உறவை பலபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதனால்தான் நடந்தால் நாடெல்லாம் உறவு என்று சொல்லி வைத்தார்கள்.

இன்று இப்பழமொழிக்கு வலுசேர்க்கும் ஆயுதமாக பேஸ்புக் விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. நடந்தால் நாடெல்லாம் உறவு என்ற பழமொழியை 'பேஸ்புக்கில் இணைந்தால் உலகமே உறவு என்று புதுமொழியை இன்று 'பேஸ்புக்' உருவாக்கி விட்டது"..!!

எனக்கு புதிய நட்பு உலகத்தை உருவாக்கி கொடுத்த பேஸ்புக்கிற்கு எனது நன்றி..!!




 

No comments:

Post a Comment