சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடை - தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்


        வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பொதுத்தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார். 

        தற்போது மாநிலங்களில் எம்.எல்..க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் சிலர் மீது கொலை ,ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார் வந்துள்ளன. இவர்களில் சிலர் மீது வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இனி வருங்காலத்தில் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் எனகோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
15
ஆண்டுகள் கிடப்பில் உள்ள கோரிக்கை
     சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்தே தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி கிரிமினல் குற்றவாளிகள் கோர்ட் மூலம் 5 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் காலத்திற்கேற்ப அரசுகள் மாறி வருவதால் அந்த கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்தது. 

     தற்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவதால் , கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , மாநில சட்டசபை,பார்லிமென்ட் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.எனவே அடுத்த பார்லிமென்ட் பொதுத்தேர்தலில் கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் நி்ச்சயம் போட்டியிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
  
      என்ன பண்ணினாலும் இது நடக்காதுன்னு கடைக்கோடி குடிமகனுக்கும் தெரியும்.15 வருஷம் கிடப்பில் போட்டதை இப்போ தூசு தட்டினாலும் அதுவும்  குப்பைக்கு தான் போக போகுது.நம் மாண்புமிகுக்கள் நடக்க விட்டுவிடுவான்களா? தேசிய கட்சி,மாநில கட்சிகள் எதுவாயினும் காசு உள்ளவர்களை நம்பியே உள்ளது. தேர்தலில் நிற்க முக்கிய தகுதியே அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டியதுதான்.கட்சிகள் வேட்பாளர் தேர்வின் போது வேட்பாளரிடம் கேட்க்கும் முதல் கேள்வி " எவ்வளவு செலவு செய்வீங்க ? என்பது தான்.செலவு செய்பவன் நேர்மையாக யார் சம்பாதித்திருக்கிறார்கள்.அரசியலில் வார்டு மெம்பராக இருப்பவன் கட்டபஞ்சாயத்து செய்கிறான்.கவுன்சிலர் அதற்க்கு மேலான தப்புகளை செய்கிறார்.கொலை,கொள்ளை,கட்டபஞ்சாயத்து, அடிதடி,ரவுடித்தனம் 
பண்ணினால் தான் எம்.எல்.ஏ ஆக முடியும்.இதில் முக்கியமானது என்னவென்றால் தன கட்சியிலேயே தனக்கு போட்டியாக இருப்பவனை போட்டு தள்ளிவிட்டு தான் எம்.எல்.ஏ ஆக வேண்டும்.ஆக இப்படி எல்லா "தகுதிகளும்" வாய்ந்த வேட்பாளரை எந்த கட்சியும் வேண்டாம் என்று சொல்லது.எனவே தேர்தல் கமிஷனின் கோரிக்கை காலம்காலமாக கிடப்பிலேயே இருக்கும்.

1 comment:

  1. நல்ல பதிவு.. ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் சொன்னதை ஒரு வரியில் போட்டு விட்டு உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக ஆழமாக கூறுங்கள்.. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete