சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jan 2013

நூடுல்ஸ் - குழந்தைகளின் எமன்


      தொலைகாட்சிகளில் வரும் அனைத்து விளம்பரங்களும் குழந்தைகளை கவரும் வண்ணமே காட்டப்படுகிறது.சோப் பவுடர்,( ஏரியல், சர்ப் எக்ஸெல் ) அப்பளம்,சமையல் எண்ணெய்கள்,மசாலா பொடிகள்,துணி,நகைக்கடை விளம்பரங்கள் என அனைத்தும் குழந்தைகளை குறிவைத்தே எடுக்கப் படுகிறது.ஏனென்றால் கடைக்கு எதை வாங்க சென்றாலும் குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டும் அல்லது குழந்தைகளையே அனுப்ப வேண்டும்.

      அவர்கள் தொலைகாட்சியில் விளம்பரங்களில்  ஒரு குறிப்பிட்ட பிராண்டை பார்த்த நினைவில் அதையே வாங்க சொல்லுவார்கள்.அதுவும் அவர்களுக்கு தேவையான பொருள் என்றால் கூடுதல் ஆர்வமும், வற்புறுத்தலும் அதிகம் இருக்கும்.எனவே கம்பெனிகளும்,விளம்பர நிறுவனங்களும்  குழந்தைகளை குறிவைத்தே எடுக்கின்றனர்.தற்போது உணவு பொருட்கள் மிக அதிகமாக அடிக்கடி காட்டபடுகின்றன.குறிப்பாக துரிதமாக செய்யும் வகையில் இருக்கும் நூடுல்ஸ் விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.

     அமிதாப் பச்சன்,சாய்னா நேவால்,இன்னும் சில மார்க்கெட் போன சினிமா நடிகைகள் இந்த விளம்பரங்களில் நடிக்கின்றனர்.அதை பார்த்து மக்களும் அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பொருட்களை வாங்குகின்றனர்.அது விளம்பரங்களில் சொல்வதை போல தரமானதா என் யாரும் யோசிப்பதில்லை.மேலும் தற்போது பெரும்பாலான வீடுகளில்  காலை வேளைகளில் அவசர கதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் தான் காலை உணவு எனபது வாடிக்கையாகி விட்டது.

         இது உண்மையாகவே சத்தான உணவுதானா? என்று தெரிந்து கொள்ள  ஆய்வு நடத்தப்பட்டது.தற்போது பிரபலமாக இருக்கும்,குழந்தைகள் அதிகம் விரும்பும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.ஏனென்றால் விளம்பரங்களில் சொல்வது போல் எந்த சத்து பொருட்களும்,குழந்தைகளின் உடலுக்கு போதிய ஊட்டச்சத்து தருவதாகவோ இல்லை.
     மேலும் அதில் உப்பு,மற்றும் கொழுப்பு சத்துகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு மிக அதிகமாக சேர்க்க பட்டுள்ளது.100 கிராம் நூடுல்சில் சோடியம்  அதிகபட்சம் 600 மில்லி கிராம் மட்டுமே அனுமதிக்க பட்ட அளவாகும்.ஆனால் இந்திய சந்தையில் விற்கப்படும் 
நூடுல்ஸ்களில் 2000 மில்லிகிராம் வரை  சோடியம் உள்ளது. இது குழந்தைகளின் உடலில் கழிவாக தங்கிவிடும். சிறுநீரகமும் அதனை சுத்திகரிப்பது சிரமம்.இதனால் கிட்னி, மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

      இது மாற்றான் படத்தில் வருவது போல் நம் மக்களையும், குழந்தைகளையும் நேரடியாக பாதிக்கும்.இந்த விளம்பரங்களில் தோன்றும் நடிகர்கள் உணவு பொருட்களின் தரம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டா நடிக்கிறார்கள் .இதனால் பாதிக்கபடுவது அப்பாவி மக்களும் குழந்தைக்களும்தானே."அவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனக்கு பணம் வந்தால் சரி" என நினைக்கிறார்கள்.இவர்களை கேள்வி கேட்க ஆளில்லை.ஆனால் இது எத்தனை தாய்மார்களுக்கு தெரியும்.யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்க பட்டுள்ளது.எனவே தரமான உணவு பொருட்களை கண்டறிந்து வாங்குவோம்.நம் குழந்தைகளின் நலம் காப்போம்.

No comments:

Post a Comment