சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Jan 2013

நண்பனுக்காக

         என்னோட பேரு பிரகாஷ்.அன்பான மனைவி,அழகான குழந்தைன்னு வாழ்க்கை நல்லாவே போயிட்டு இருக்கு.சின்ன வயசிலேருந்து உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போ ட்ராவல்ஸ் வச்சு நடத்தி வர்றேன்.அதனால எனக்கு வெளிபழக்கம் அதிகம்.கஸ்டமர்களும் சரி,நண்பர்களும் சரி.அதுலயும் நான் வண்டி நிறுத்தும் ஸ்டேண்டில் இருக்கும் நண்பர்களின் அலப்பறை தாங்க முடியாது.அங்க சந்தோசம்,துக்கம்,போட்டி,பொறாமை,பிரச்சனை, என எல்லாமே கலந்து இருக்கும்.

      என்னிடம் டிரைவராக செந்தில் னு  ஒருத்தன் வண்டி ஓட்றான். அவனுக்கு தான் எப்பவுமே அஜித்,விஜயனு மனசுல நினைப்பு.ஆனா பயபுள்ள மிர்ச்சி சிவா மாதிரி மொக்க பார்ட்டி.வாடகைக்கு போகும் போது அல்லது வரும்போது இடையில பொண்ணுக படிக்கிற காலேஜ்,ஸ்கூல்,இருந்துடா போச்சு வண்டிய அங்கனையே நிறுத்திட்டு பல்ல காட்டிட்டு நின்னுக்குவான்.எல்லா பொண்ணுகளும் போயிடாலும் இவன் நகரமாட்டான். சரி எதோ வயசுகோளாறு சைட் அடிக்கிறானு நாங்க எல்லாம் கண்டுக்கல.
       ஒரு நாள் வாயிலிருக்கிற பல்லெல்லாம் தெரிய சிரிச்சிக்கிட்டே வந்தான்." அண்ணே, ஒரு பொண்ணுகிட்ட நான் உன்ன காதலிக்கிறேன்"னு சொல்லிட்டேன்னு சொன்னான்.எங்களுக்கு ஒரே ஆச்சரியமா போச்சு.எல்லாரும் அவன சுத்தி நின்னு " பொண்ணு யாருடா? எந்த ஸ்கூல்?"னு விசாரிச்சோம்.போட்டாம் பாருங்க ஒரு அனுகுண்ட,அவனவன் அதிர்ச்சி ஆயிட்டான்.
       அதுக்கு காரணம் என்னனா அவன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தான்.அந்த ஏரியாவில ஒரு  பொண்ண கரெக்ட் பண்ணிட்டான்.அப்பிடியே எந்த பிரச்சனையும் இல்லாம போச்சு அவன் வாழ்க்கை.அவன எங்க பார்த்தாலும் செல்போனும் கையுமாவே இருந்தான்.எஸ்.எம்.எஸ். போன் பண்ணி கடலை போடுறதுன்னு எப்பவும் பிசியாவே இருந்தான்.
 
          நாங்களும் எங்க வேலையில அவன கண்டுக்கல.அப்பிடியே ஒரு ரெண்டு மூணு மாசம் ஓடிருச்சு.ஒரு நாள் அவன் ஸ்டேண்டுக்கு வரல.எனக்கும் வாடகை வந்ததால போயிட்டேன்.சாயங்காலம் மூணு மணிக்கு போன் பண்ணினான் என் நம்பர்க்கு."அண்ணா,  ஹவுஸ் உணர் என்னை  வீட்டுக்குள்ள  வச்சு பூட்டி வச்சுருக்கான்.அந்த பொண்ணோட அப்பன் என்னை பிடிச்சு வைக்க சொன்னானாம்.அந்தாளு  ஆளுங்களோட  வந்து என்னை அடிக்க போறான்.நீங்கதான் என்னை எப்பாடியாவது காப்பாத்தனும்னு அழுகிறான்.
எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.அப்புறம் எங்க ஸ்டேண்ட் பசங்க நாலு பேர கூப்பிட்டுகிட்டு  அவனோட ரூம்க்கு போனோம்.அங்க போனா அந்த ஹவுஸ் ஓனர் ஒரு நாலு பேரோட அவனை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு அந்த பொண்ணோட அப்பனுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கான்.
        நாங்க நாலு பேரும் வேகமா வீட்டுக்குள்ள போய் அந்தாள (ஹவுஸ் ஓனர்)"ரைய்" னு 
ஒரு அறைவிட்டேன்.அந்த அதிர்ச்சியில் இருந்து அவரு மீள்வதற்குள் நான் அவனிருந்த ரூமின் பூட்டை உடைத்து உள்ளே போயி  அவனுக்கும் ஒரு அரை விட்டு " ஏண்டா நாயே உள்ள பூட்டி வச்சுருக்கானு போன் பண்ணி அழுகுறியே?ரண்டு உதை விட்டா கதவு தன்னால திறக்குது,அது தெரியாதாடா" சொல்லி வெளியே இழுத்துட்டு வந்துட்டேன்.
       உடனே ஹவுஸ் ஓனர் தெளிவாயிட்டார். அவரு என்னை பார்த்து "டேய், நீங்க எல்லாம் ஆம்பளைகளா இருந்தா  அந்த பொண்ணோட அப்பன் வர்ற வரைக்கும் இங்க இருங்கடா"னு சவால் விட்டான்.நானும் எதோ தைரியத்தில் "இருக்கிறோம்டா,அவன் எவ்ளோ பெரிய ஆளுன்னு நானும் பாக்கிறேன்"னு சொல்லிட்டு என் காருக்குள்ள போய் உக்காந்துட்டேன்.அப்புறம் தான் மனசுக்குள்ள சின்னதா ஒரு பயம் வந்துச்சு.எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிக்கும் போது என் நண்பர் ஒருவரின் நினைவு வந்தது.அவரு ஜோதிடம் பார்ப்பவர்.வாய்ஜால வித்தகர்.இனி அவர்தான் இந்த கதைக்கு நாயகன்
உடனே அவருக்கு ஒரு போன போட்டேன்." அண்ணே, நான் பிரகாஷ் பேசுறேன்.ஒரு சின்ன பிரச்சனை.நம்ம செந்தில் ஏரியால இருக்கோம்.உடனே வாங்க"னு சொல்லவும் " சரி தம்பி,இன்னும் பத்து நிமிசத்துல வந்துறேன்"னு சொன்னார்.அப்புறம் தான் எனக்கு கொஞ்சம்  ரிலாக்ஸ் ஆச்சு.
 
        கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணோட அப்பன் நாலஞ்சு கார்ல ஆளுங்களோட வந்து இறங்கினான்.ஒரு இருபது பேர் இருப்பாங்க.நாங்க வெறும் நாலு பேரு.செந்திலோட சேர்ந்து அஞ்சு பேரு."சரி இன்னிக்கு அடிதடி தானு நினச்சுட்டு வெளிய வந்தேன்.அவங்கப்பன் ஏதோ ஒரு கட்சியில இருப்பான் போல. பொண்ணோட அப்பா " எவண்டா எம்பொண்ணு பின்னாடி சுத்துறது?" னு சத்தம் போட கரெக்டா நம்மாளும் வந்து சேந்தார்.
        ஹவுஸ் ஓனர் வந்து செந்தில காண்பிச்சார்." நான் உன்னை பூட்டி வைக்க சொன்னா வெளிய விட்டு வேடிக்கை காட்டுறா?" ஒரு அடி விட்டார்.
" இவங்கதான் கதவை உடைச்சு அவன வெளிய கூட்டி வந்தாங்க?னு  என்னை கோர்த்து விட்டார்." நீ அவ்ளோ பெரிய ரவுடியாடா?நாலு பேரு இருந்துட்டு என்கிட்டே மோதுரிங்களா?" நு சொல்லவும் உள்ளுக்குள்ள பயந்தாலும்  நான் நெஞ்ச நிமிர்த்திட்டு "டேய் இங்க நாலு பேருதான் இருக்கோம் னு நினைச்சியா? ஒரு போனை போட்டா நம்ம பசங்க எத்தனை பேரு வருவானுக தெரியுமா?னு சொல்லிட்டே (சும்மாலுமே) போனை எடுத்து கால் பண்ணி " டேய் நான்தாண்டா பொண்ணோட அப்பா ஆளுங்களோட வந்துருக்கான்.எல்லாரும் கிளம்பி வாங்கடா " னு சொல்லிட்டு ( நிஜமாலுமே எவனும் எங்கயும் வெய்ட் பண்ணலஅந்த ஆளோட முகத்த பார்க்கவும் லேசா பயம் தெரிஞ்சது.  
          ஆஹா, இவனுக கிட்டயிருந்து பேசியே தப்பிசுடாலம்னு தோனுச்சு.அப்புறம் நம் நண்பரும் சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டு களத்துல இறங்கிட்டார்.அப்படி இப்படி பேசி சமாதானமாச்சு.பொண்ணோட அப்பா " சரிங்க நான் என் பொண்ணை  பாத்துக்குறேன்.உங்க பையன் என் பொண்ணு பின்னாடி வரக்கூடாது.மீறி நடந்தா நான் எதுக்கும் பொறுப்பில்ல"னு சொன்னார்.இதெல்லாம் நம் நண்பரின் வேலைதான்.நண்பரும் பெண்ணின் அப்பாவும் ரொம்ப கேசுவலாக பேச ஆரம்பிச்சுட்டாங்க.அதான் நண்பரின் திறமை.பொண்ணோட அப்பா நண்பரிடம் தன் விசிடிங் கார்ட் கொடுக்கும் அளவுக்கு மனுசன மாத்திட்டார் என் நண்பர்.அவரும் வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டார்.அப்புறம் எல்லாரும் ஒண்ணா  போய்  டீ  சாப்பிட்டது எல்லாம் வேறு கதை.ஒரு வழியா பிரச்சனை முடிந்தது.
 
          அதற்கு பின் சில மாதங்கள் கழித்து  செந்தில்தன் ஜாதகத்தை பார்க்க நம் நண்பரிடம் வந்தான். நானும் அப்போ அங்கிருந்தேன்.ஜாதகம் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் அரட்டை அடித்தோம் பேச்சு வாக்கில் "செந்தில்  அந்த பொண்ணோட சொந்த ஊர் எது?"னு  கேட்டார் நண்பர். அவன் சொன்னான்.உடனே " என்னப்பா நீ அங்க நம்மளுக்கு தெரிஞ்ச ஆள் நிறைய இருக்காங்க! நீ முதல்லய நம்மகிட்ட சொல்லிருந்தா பிரச்சனை இல்லாம முடிச்சுருகலாம்.நீயும் இந்நேரம் புள்ள குட்டியோட சந்தோசமா இருந்திருப்ப"னு சொன்னார்.எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் புரியல.எப்படின்னா?னு செந்தில் நண்பர் கிட்ட கேட்கவும் அவர் ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்து டேபிளில் போட்டார்."இதோ இவர்தான் அந்த ஏரியாவுல பெரிய ஆளு! நம்மளுக்கு ரொம்ப நல்லா பழக்கம்."அப்படின்னார்.அந்த விசிட்டிங் கார்ட் பாத்துட்டு செந்தில் " யோவ் இது அந்த பொண்ணோட அப்பா! யா எங்ககிட்டய  உன் வாய் ஜாலத்த காமிககிறியா? னு எழுத முடியாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பிச்சுட்டான்.
 
இப்படியே ஜாலியா போயிட்டு இருக்கு வாழ்க்கை.

No comments:

Post a Comment