சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

தமிழக அரசு விருதுகள் 2013



தமிழ்தொண்டு மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆளுங்கட்சியை  சேர்ந்தவர்களுக்கும்,அவர்களுடைய ஆதரவாலர்களுக்குமே வழங்கப்படும்.வழக்கம் போல் இந்த ஆண்டும் அப்படியே வழங்க பட்டுள்ளது விருதுகள் விவரம் வருமாறு: 

திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது - கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது- சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார், கி..பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர் விருது - தா.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்படும். 


இந்த விருதுகள் வரும் 15ம் தேதி தேனியில் நடக்கும் திருவள்ளுவர் தின விழாவில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையும் , ஒரு பவுன் தங்க காசும், நற்சான்றும் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு நல உதவியும் வழங்கப்படும். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக பெரியாற்றில் வீணாகும் நீரை சேமிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கர்னல் பென்னி குவிக் பெரும் சிரமத்திற்கு மத்தியில் 1895ல் அணையை கட்டி இப்பகுதி சுற்றுமக்கள் பெரும் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அமைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த அணையை கட்டிய பென்னிகுவிக்கை பாராட்டும் வகையிலும், தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் பென்னிகுவிக் நினைவு மண்டபம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் லோயர்கேம்பில் மலைப்பாங்குகள் நிறைந்த இடத்தில் ரூ. 1 .25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தை முதல்வர் ஜெ., வரும் 15 ம் தேதி திருவள்ளுவர் தினத்தில் திறந்து வைக்கிறார். 

விருது பெறுவோருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையும் , ஒரு பவுன் தங்க காசும், நற்சான்றும் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு நல உதவியும் வழங்கப்படும். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment