சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jan 2013

மரியாதை நாராயணசாமி


மாமனார் வீட்டில் "மரியாதை"யாக வாழும்,

நம்ம நாராயணசாமி அவர் மனைவி மேல ரொம்ப வருத்தத்துல இருந்தாரு.

"
எப்ப பார்த்தாலும் இது என்னுடைய வீடு...என்னோட கார்...என்னோட தோட்டம்னு சொல்றியே...என்னைக்காவது இது நம்மோடதுன்னு சொல்றியாடி"

நாராயணசாமியை பார்த்து சொன்னார் அவர் மனைவி,

"
சரி வாங்க... நம்ம சேலையையும், நம்ம ஜாக்கெட்டையும் துவைக்கலாம்
"
 
நம்ம நாராயணசாமி ஒரு டாக்டரைப்போய் பார்த்தாரு....

"
உங்க பேரு"

"
நாராயணசாமிங்க"

"
என்ன பிரச்சினை?"

"
டாக்டர்...ஒரு 15 வருஷத்துக்கு முன்னால கால்ல அடிபட்டுடுச்சின்னு உங்ககிட்ட வந்தேன்... கால்ல கட்டு போட்டுட்டு தண்ணிர் படாம பார்த்துக்க சொன்னீங்க"

"
...அப்படியா....15 வருஷம் ஆயிடுச்சில்ல...அதான் மறந்துடிச்சி... சொல்லுங்க இப்போ என்ன பிரச்சினை"

"
இனிமே நான் குளிக்கலாமான்னு கேட்டுட்டு போக வந்தேன் டாக்டர்
"
 
 
நம்ம நாராயணசாமிய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சுங்க"

"
ஏன்.... என்ன பண்ணினார்?"

"
எல்லோரும் 40ம் நமக்கே...40ம் நமக்கேன்னு சொல்லும் போது இவரு மட்டும் 15ம் நமக்கேன்னு பிரச்சாரம்
பண்றாரு
 
 
தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம நாராயணசாமி.

"
தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

"
என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"

"
அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"

"
அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்
"
 
 
கல்லூரி முதல்வர்: நம்ம கல்லூரில சுமாரா எத்தனை பொண்ணுங்க இருப்பாங்க?

மாணவன்: நம்ம கல்லூரில எல்லா பொண்ணுங்களுமே சுமாராத்தான் இருப்பாங்க..

கல்லூரி முதல்வர்: ....???.....!!!!!


No comments:

Post a Comment