அலெக்ஸ் பாண்டியன் - டீநேஜ் பொண்ணுகளுக்கு ரொம்ப பிடிச்ச சாக்லேட் பாய் கார்த்தி தான் ஒரு ஆக்க்ஷன் ஹீரோ ஆக வேண்டுமென்று ஆசை பட்டிருக்கிறார்.எல்லாம் சரிதான்! ஆனால் கதை மட்டும் கேக்காதிங்க லாஜிக் பாக்காதிங்க அப்படின்னு டைரக்டர் சுராஜ் சொல்லி கூட்டி வந்துடார்.
சும்மா பரபரன்னு ஒரு இன்ட்ரோ கொடுக்கணும்னு முயற்சி பண்ணிருகாங்க,ஆனா மிர்ச்சி சிவாவ பாக்கற மாதிரியே இருக்கு.
ஆடியோ லான்ஜ்ல அண்ணனும் தம்பியும் ( இதுல சிங்கம் சிறுத்தை னு காம்பியர் சொன்னாக,) சும்மா கலந்து கட்டி பேசுனாங்க .அண்ணன் சிங்கம்னு ஒரு கிட கொடுக்கும் போது தம்பி சிறுத்தை னு போட்டிக்கு வந்தாரு.இப்போ அண்ணன் மாற்றான் பிளாப் ஆனதும் அண்ணா மனசு கஷ்ட படக்கூடாதுன்னு அலெக்ஸ் பாண்டியன் வந்துருக்கு போல.
மூன்று முகம் படத்துல அப்பா ரஜினியோட பேரு அலெக்ஸ் பாண்டியன்.டிரெய்லர் பாக்கும் போது ரஜினி ஸ்டைல கார்த்தி போலிஸ் உடையில் நடந்து வருவார்.அத நம்பி படத்துக்கு போனா 80 ரூபா வேஸ்ட்.
சந்தானம் காமெடியும் காமநெடியாகவே இருக்கு. எத்தன நாளைக்கு தான் இப்படி நடிக்க்குராதுன்னு சீனிவாசன் கூட நடிக்க போய்ட்டார் சந்தானம்.
பாட்டு,மற்றும் பின்னணி இசை தேவிஸ்ரீபிரசாத் நல்லாவே பண்ணிருக்கார்.
சரி சண்டைகாட்சியாவது டெர்ரரா இருக்கும்னா விஜயின் ஆதி படத்துல பாலத்துல இருந்து குதிப்பாரே அத காப்பி அடிச்சு ரெண்டு சீன் பண்ணிடாங்க.
ஒன்னு பாலத்துல இருந்து குதிக்கிறது,ரெண்டு கார் டயரையே அருவாளால கிழிக்கிறது (ரூம் போட்டு யோசிங்கள சுராஜ்) முடியல சாமி.
அப்பவே எந்துருச்சு ஓடியாந்துருக்கணும்.வெளிய டிவி காரங்க நிக்கிறாங்கன்னு விடமாட்டேனுடாங்க. அதவிட கிளைமாக்ஸ் அனுஷ்கா வில்லனை பார்த்து "நீங்க ஆம்பளைகளா இருந்தா அவரு கைய அவுத்து விட்டு அடிங்கடா"னு சொல்லும்போது துப்பாக்கி ல "இப்ப கைய அவுத்து விட்டுட்டு அடிடா" னு விஜய் சொல்ற மாதிரியே இருக்கு.இது விஜய் படமா? இல்ல கார்த்தி படமா?
ஒரே ஒரு வேண்டுகோள் அமுதன் மற்றும் மிர்ச்சி சிவா இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்த பார்த்துட்டு தயவு செய்து தமிழ்படம் - 2 எடுத்துராதிங்க.
அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் சிவக்குமார் பசங்கன்னு ஒரு மரியாதையில உங்க படத்துக்கு வருகிற குடும்பங்கள் நிறைய இருக்கு
தயவு செய்து ஆக்ஷன் கீரோ ஆசைல அத கெடுத்துகாதிங்க.அம்புட்டுதான் சொல்லிட்டேன்.
அடுத்தது என் விமர்சனத்தை படிக்கும் நண்பர்களுக்கு சொல்றது என்னனா எல்லாத்தையும் படித்து விட்டு கதையை பத்தி ஒண்ணுமே எழுதவே இல்லையேன்னு கமெண்ட்ல கேட்டிங்க எனக்கு கேட்ட கோவம் வந்துரும் சொல்லிட்டேன்.அதையும் மீறி சொல்லித்தான் ஆகணும்னா நான் என்ன பண்ணுறது தியேட்டர் ல போய் படம் பார்த்து என்னை மாதிரியே நொந்து நூல் ஆகி வாங்க நன்றி.
No comments:
Post a Comment