சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jan 2013

காதலுக்கும்திருமணத்திற்கும ் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும்திருமணத்திற்கும உள்ள வித்தியாசம் என்னவெனக்கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ  ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச்செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக்கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம்
கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது."என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும்கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்தஉயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்தபோது முதலில் உயரமான ஒரு செடி என்னைக்கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக்
கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக்
கூடுமென மேலும் நடந்தேன். அதன்பிறகு தென்பட்டதெல்லாம குட்டையான ரோஜாச்செடிகளே. வந்த வழியே திரும்பவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமானசெடியையும் கொண்டு வர முடியாமல் போய்
விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான்
காதல்!".பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில்
சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப்
பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக்கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச்செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான்அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச்செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விடஅழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும்  விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில்முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்தசெடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி,
ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப்பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விடஅழகான செடிகளை நான் பார்த்தபோதும்
பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!2 comments:

  1. நல்ல வித்தியாசம்...

    நிபந்தனையை கடைபிடித்த சீடன்... இன்று...?

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete