இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஈழத் திரைப்படம் ..
இதுவரை தமிழ் ஈழ சம்பந்தமாக பல படங்கள் தமிழகத்தில் வெளிவந்து இருந்தாலும் அவற்றை இந்திய சென்சார் போர்டு திரைபடத்தின் பல இடங்களில் கத்திரி இட்டு பின்பு மத்திய அரசு தங்கள் கடமைக்கு இந்திய இறையாண்மை கெடாதவாறு மேலும் பல இடங்களில் திரைப்படத்தை கத்திரி இட சென்சார் போர்டுக்கு ஆணையிட்டும் பின்னர் தலையும் புரியாத காலும் புரியாத தமிழ் ஈழ படம் தான் திரை அரங்குகளுக்கு வந்து சேரும் .
இந்த தேன்கூடு என்ற படம் " தமிழக இயக்குனர் இகோர்" இயக்கத்தில் அடுத்த மாதம் உலக அரங்குகளில் வெளிவர இருக்கிறது ..அவற்றை இந்தியை அரசு எங்கும் கத்திரி இட முடியாது , கனடா ,பிரான்ஸ் , ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிறு கத்திரி இடமால் வெளியிடபடுகிறது எனினும் இப்படத்தை நாம் தமிழகத்தில் காண வாய்ப்பில்லை . இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது பணி என்று நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பல முயற்சிகளை செய்துவருகிறார் , மேலும் திரு வைகோ மற்றும் கொளத்தூர் மணி அவர்களும் இந்த படத்திற்கு முழு ஆதரவை தந்துள்ளனர் ..இப்படம் தமிழகத்தில் வெளியிட முடியாத நிலையிலும் ..இவர்களின் மூவரின் துணையோடு இப்பட தட்டுகள் மக்களிடையே DVD தட்டுகளை கொடுத்து புழங்குவது உறுதி ..என்கிறார்கள் ..
கிழே திரு சீமான் அவர்களும் , வைகோ அவர்களும் இப்படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை வாசித்து பாருங்கள் ..இதை போல் பல படங்கள் வெளிவர நாம் துணை நிற்பதற்கு இப்படத்தை வெற்றி பெறச் செய்வோம் ..!!
சீமான் இப்படத்தை பற்றி குறிப்பிடுகையில் ...
தேன்கூடு என்ற வார்த்தை கேட்டவுடனே நமக்கு சிந்தனையில் வருவது மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும் ஒன்று உழைபபிடம் , இருப்பு , கூட்டு வாழ்க்கை.தேன்களுக்கும் , தேன்கூட்டுகளுக்கும் பொருந்தும் இந்த வார்த்தை ஈழத்தில் எம்மின உறவுகளுக்கும் அப்படியே பொருந்துகின்றது . ஒரு பாதுகாப்பான தேன்கூட்டை கலைக்கும் பொழுது அந்த தேனிக்களுக்கு எவ்வளவு தவிப்பும் துடிப்பும் நேர்ந்திடுமோ அதைவிட பன்மடங்கு அதைப்போலவே ஈழ மண்ணில் என் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தவிப்பையும் , துடிப்பையும் அனுபவித்து வருகின்றனர் . துன்பத்தை களைந்து கடந்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பெற்ற துன்பத்தை பதிவு செய்வது .
60 ஆண்டுகளுக்கு மேலாக எம் தாய்த் தமிழ் ஈழ உறவுகள் வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை துளி கூட கலப்பிடம் இல்லாத உண்மைக் காவியத்தை இயக்குனர் இகோர் இயக்கிய திரைப்படம் தான் " தேன்கூடு " திரைப்படம் . அதற்காக இது ஆவணப் படம் அல்ல , அணைத்து தமிழர்களும் ஆவணபடுத்திக்கொள்ள வேண்டிய படம் தான் " தேன்கூடு ".!
இப்படம் இந்திய ( தமிழ்நாடு ) இலங்கையை தவிர எல்லா நாடுகளிலும் வெளியடபடுகிறது . எம் இனத்தின் பிரச்சினைக்கான தொடக்கம் இந்த படத்தில் சொல்லப் படுகிறது அதற்கான முடிவுகளையும் சொல்லபடுகிறது இந்த தேன்கூடு படத்தில் .
தமிழ் தேசிய இனத்தின் மீது சிங்கள அரசு செய்யும் அடக்குமுறை , ஒடுக்குமுறை இதனால் நீண்ட நெடிய காலம் எம் ஈழ மக்கள் அனுபவித்து வந்த வலி , வேதனை , காயங்கள் , தூக்கிச் சுமந்து வந்த துயர துன்பம் , இவற்றோடு எம் ஈழ மக்கள் கொண்டிருக்கிற உணமையான , நியாயமான கோபம் இவற்றை எல்லாம் பதிவு செய்வதோடு , நம் இனத்திற்கான வீரம் , அன்பு , காதல் , கலை விளையாட்டு , பண்பாடு , வாழ்க்கை முறை பெருமைக்குரிய தமிழர்களின் அடையாளங்கள் இவற்றை எல்லாம் இந்த தேன்கூடு படம் பதிவு செய்து இருக்கிறது .
தமிழ் தேசிய இனத்தின் மீது சிங்கள அரசு செய்யும் அடக்குமுறை , ஒடுக்குமுறை இதனால் நீண்ட நெடிய காலம் எம் ஈழ மக்கள் அனுபவித்து வந்த வலி , வேதனை , காயங்கள் , தூக்கிச் சுமந்து வந்த துயர துன்பம் , இவற்றோடு எம் ஈழ மக்கள் கொண்டிருக்கிற உணமையான , நியாயமான கோபம் இவற்றை எல்லாம் பதிவு செய்வதோடு , நம் இனத்திற்கான வீரம் , அன்பு , காதல் , கலை விளையாட்டு , பண்பாடு , வாழ்க்கை முறை பெருமைக்குரிய தமிழர்களின் அடையாளங்கள் இவற்றை எல்லாம் இந்த தேன்கூடு படம் பதிவு செய்து இருக்கிறது .
இன்றைக்கு எம் தாய்த் தமிழ் ஈழம் தரிசாய் போனது , ஈழ தமிழ் தேசம் முழுவதும் சிங்களமயமாய் போனது , எம் ஈழ நாடே சுடுகாடாய் போனது ..எம் ஈழ இன மொத்தமும் பிணமாய் போனது ..!!
அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு கேட்டு போராடிய ஈழ மக்கள் , ஆடை இன்றி அம்மணமாய் இழிவான சாட்சியங்களாக உலக அரங்குகளிலே ..
சுதந்திரம் கேட்டு போராடிய எம் மக்கள் இன்று சோறு கேட்டு போராடும் அவல நிலை .!
பிறந்து , வளர்ந்து சுதந்திரமாய் வாழ்ந்த எம் மக்கள் இன்று முள்வெளிக்கு இடையில் சிறையில் இன்று .நாங்கள் வீழ்ந்தோம் ஒருவர் விழ ஒன்பது பேர் எழுந்து போராடுவோம் . விழுதல் என்பது நாம் அழுவதற்காய் அல்ல நாம் எழுவதற்காய் என்பதை என் மக்கள் நிருபித்துவருகின்றனர் .
தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து திமிர் கொண்டு மேலே எழுகிறது ..
வெறும் காற்று நிரப்பட்ட பந்தே எழுகிறது என்றால் , உணர்சிகளால் நிரப்பப்பட்ட மறத்தமிழன் இவ்வுலகத்தில் எழுந்து நிற்பது சுலபம் .
வெட்ட வெட்ட வாழையே திளைக்கும் பொழுது தமிழன் திளைக்கமாட்டனா.,.,.? என்கிறார் சீமான் ..
பலியாகிப்போன கிராமத்தில் இருந்து புலியாகி போனவனுடிய வரலாறு தான் இந்த " தேன்கூடு " திரைப்படம் என்றார் சீமான் ....!!
தேன்கூடு வெறும் திரைப்படம் அல்ல எம் இன அடையாளத்தின் வரலாற்றுப் படம் . இந்த அறிய படத்தை இயக்கிய தமிழக இயக்குனர் இகோர் பணியாற்றவில்லை கடமையாற்றி இருக்கிறார் என்று தனது அறிக்கையில் வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வைகோ இப்படத்தை பற்றி கூறுகிறார் :
உங்கள் நெஞ்சகூட்டில் அதிர்வலைகளை சிங்கள அரசு நடத்திய தமிழ் ஈழ இனப படுகொலைகள் துன்ப இன்னல்கள் அழிவுப் பேரடிகள் தாக்க புரண்டோடும் கண்ணீர் வெள்ளத்தில் ஈழ விடியல் என்னும் கறையை நாடி நம்பிக்கை படகில் குனவாதன் ,குமிதினி நடிக்கும் அமரர் காதல் காவியம் தான் ப்ராப்தி சாமுவேல் தயாரிப்பில் , தமிழக இயக்குனர் இகோர் இயக்கம் படம் தான் " தேன்கூடு " என்னும் சோகச் சித்திரம் .
மலர்கூடு மலர்களின் பூந்தாதை சுமந்து சேகரித்த தேனை அடைகாத்து எவ்வுயிருக்கும் தொல்லை தராமல் சுதந்திரமாக வாழ்பவை தேனிக்கள் , அந்த தேன்கூட்டில் கல்லெறிந்தால் வெடித்து கிளம்பும் எரிமலை போல தேனிக்கள் தாக்கும் ,
தேன் குழவிகள் கொட்டினால மதம் பிடித்த யானைகள் கூட மிரண்டு ஓடும் ..வீரத்தோடும் , மானத்தோடும் உலகில் உயர்ந்த நாகரிகத்தில் தங்களுக்கு என அரசு அமைத்து வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களை அடிமை இருளில் தள்ளினர் சிங்கள கொடியோர் . "கோடல் வாள் இதழ் எடடா விகு கொடியோர் செயல் அறவே" என ஆயுதத்தை ஏந்தினர் ஈழத்து தமிழ் இளைஞர்கள் .
வெஞ்சமவருக்கு அஞ்சாத புலிவீரனாக படத்தில் நடித்திருக்கும் குனபாதன் , குமிதினி அவர்களின் காதல் மணவாழ்வு துன்பமும் , துயரமும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டம் , திடுக்கிடும் திருப்பங்கள் உயிர்சிலிர்ப்பை ஏற்படுத்தும் உன்னதமான வசனங்கள் . மலரப் போகிறது தமிழ் ஈழம் , தமிழ் குலமே எழுக !! அடுத்த களத்திருக்கு ஆயுதமாக எழுக !! இப்படத்தில் குனபாதணும் குமிதினியும் ஈழப் போரட்டத்திற்கு பேராயுதமாக வார்ப்பித்து தந்து விட்டார்கள்
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இனி சூளுரைக்க வேண்டிய நேரம் .
இளம் புலிகள் தாக்குதலுக்கு அடுத்தகட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்..இனி எத்துனை வல்லரசு சேர்ந்தாலும் இனி அவற்றை சொற்பமாக தகர்த்து எறிய காத்துகொண்டு இருக்கிறார்கள் புலிகளின் கூட்டம் .ஆயுதம் ஏந்தும் கூட்டம். அந்த நம்பிக்கையை மையமாக எழுப்பும் திரைப்படம் தான் தேன்கூடு திரைப்படம் .
உலகெங்கும் வாழும் ஈழத் தாகம் கொண்டு இருக்கும் தமிழ் மக்களே உங்கள் ஒவொவொரு இல்லத்திலும் தேன்கூடு உங்கள் சின்னத்திரையை அலங்கரிக்கட்டும் , வெள்ளித் திரையிலும் காணுங்கள் .ஈழ விடியலை நோக்கி நமக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை பயணத்தில் மற்றுமொரு ஒளிச் சுடர் தான் இந்த தேன்கூடு ..இப்படத்தை ஆவணப் படுதிகொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று திரு .வைகோ அவர்கள் தனது உரையில் தெரிவித்து உள்ளார் .
http://www.youtube.com/watch?v=pM9S2bsncrI சீமானின் கருத்து காணொளி YOUTUBE
http://www.youtube.com/watch?v=WcBjsP89MB8 வைகோவின் கருத்து காணொளி YOUTUBE
http://www.youtube.com/watch?v=SttON0GFtMY தேன்கூடு TRAILER YOUTUBE
No comments:
Post a Comment