சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jan 2013

நடிகர் கமல்ஹாசன் பேசியதன் ஹைலைட்ஸ்...


விஸ்வரூபம் படத்தின் தடை நீக்கத்திற்கு பிறகு நடிகர் கமலஹாசன் தொலைகாட்சியில் பேசியிருக்கிறார்.அவரின் தன்னம்பிக்கையான சில வார்த்தைகள் இதோ உங்களுக்காக .

* விஸ்வரூபத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டுள்ளது என எனக்கு புரியவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. 


* எனது 
சொத்துக்கள் அனைத்தையும் போட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளேன். நாட்டின் ஒற்றுமைக்காக எனது சொத்துக்களை இழக்கத் தயார். 

*
எனக்கு அரசியல், மதம் இல்லை; மனித நேயம் மட்டுமே முக்கியம். மதச் சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போய்விட்டால் வேறு இடத்தில் குடியேறுவேன். 

*
அரசியல் விளையாட்டுக்கு இஸ்லாமிய நண்பர்களுடன் நானும் கருவியாகிவிட்டதாக நம்புகிறேன். 

*
இப்போது நிகழ்வனற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்தால் நான் அரசியல்வாதி ஆகிவிடுவேன். 

*
இது இந்த வீட்டில் நடக்கும் கடைசி பிரஸ்மீட்டாகவும் இருக்கலாம். 

*
வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவது தாமதமானால் என் வீடு, சொத்துகளை இழக்க நேரிடும். 

*
என் சொத்துகளை இழப்பதில் கவலையில்லை; மீண்டும் சம்பாதிக்கும் திறமை என்னிடம் உள்ளது. 

*
என் சொத்துகள் அனைத்தையும் இழந்தாலும்கூட, எனக்கான என் ரசிகர்கள் இருக்கிறார்கள்

*
என் திறமையால் எனக்கு கர்வம் உண்டு; என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மீள்வேன்.

*
வீழ்வேன்; மீண்டும் மரமாக முளைப்பேன்; மரம் மீண்டும் சோலைவனம் ஆகும். 

*
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ரிலீஸ் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment