சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jan 2013

நாராயணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை


தன் கணவர் நாராயணசாமி அருகில் இல்லாததை உணர்ந்து அவரை வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார் அவரது மனைவி. 

நாராயணசாமிக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார் அவர் மனைவி. மனம் பதைபதைத்து நாராயணசாமி அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, 

என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

நாராயணசாமி: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

நாராயணசாமி: (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

நாராயணசாமி: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்துமரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

நாராயணசாமி : கண்களைத் துடைத்தவாறு சொன்னார் " அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை கிடைத்திருக்கும்"

No comments:

Post a Comment