சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jan 2013

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் சிம்பு - தனுஷ்


                பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தங்களின் விசுவாசத்தை காட்ட போட்டி நடிகரை திட்டுவது அந்த நடிகரின் ரசிகர்களை திட்டுவதும்,அவர்களுடன் சண்டையிடுவதும் தொன்று தொட்டு நடந்து வருவது.திரையுலகில் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் சிவாஜி பட போஸ்டரை கிழிப்பது,அந்த படத்தினை பற்றி 
தவறாக ( படம் நன்றாக இல்லை ) என மற்றவர்களிடம் பரப்புவதும் என இருந்தனர்.அதே போல் சிவாஜி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு எதிராக பேசுவதுமாக இருந்தனர்.இந்த சண்டையில் ஜெய்சங்கர்,ஜெமினி கணேசன் போன்ற மற்ற நடிகர்களும் மாட்டி கொண்டனர்.

                 பின் எம்.ஜி.ஆர். ம் சிவாஜியும் அரசியலில் நுழைந்ததும் இந்த பிரிவினை மிக அதிகமாகி அடிதடி வரை சென்றது. ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் அதை ஆரம்ப காலங்களில் இதை கண்டும் காணாமல் தான் இருந்தார்களோ?என்னவோ தெரியவில்லை .பின்னர் ஒரு மேடையில் சிவாஜி எம்.ஜி.ஆரை  அண்ணன் என்பதும் எம்.ஜி.ஆர் சிவாஜியை தம்பி என்றும் மக்கள் முன்னிலையில் பேசியதும் எல்லா பிரச்சனைகளும் முடிந்தது. 
            பின்னர் அடுத்த தலைமுறையான ரஜினி  கமல் இருவரின் ரசிகர்கள் மோதினர்.ஆரம்ப காலத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர்.பின் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்ததும் ரசிகர்கள் வன்முறை அதிகமானது.அதுவும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியானால் இன்னும் அடிதடி போலிஸ் பாதுகாப்பு வரை சென்றது.ஆனாலும் இருவரும் நட்புடனே இருந்தனர்.ஒருவேளை தங்களின் படம் ஓட ஒரு விளம்பரத்துக்காக ரசிகர்களின் மோதலை வேடிக்கை பார்த்தனரோ என்னவோ?ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த இருவரும் ரசிகர்களை நல்ல வழியில் செல்ல அறிவுறுத்தினர்
.கமல் 50 நிகழ்ச்சியில் ரஜினி "என் கலையுலக அண்ணா "என்றும் கமல் சொல்லியிருந்தால் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள் 'என்றும் பேசினார்.அதன்பின் மேடையேறிய கமல் ரஜினியை கட்டி அனைத்து முத்தமிட்டார்.பின் " இது வரை எங்கள் இருவரை போல் திரை உலகில் யாரும் நண்பர்களாக  இருந்ததில்லை.பாத்தீங்களா நான் ரஜினியை கூட விட்டு வைக்கவில்லை "என தான் முத்தமிட்டதை காமெடியாக கூறினார்.கமல் தன் திறைமை முழுவதையும் பயன்படுத்தி பல கெட்டப்,தொழில்நுட்பம்,போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி பல சாதனைகள் புரிந்தாலும் தன ஒற்றை சிரிப்பிலும்,தலையை கோதுவதிலும்,ஸ்டைலிலுமே வென்றுவிடுகிறார் ரஜினி.
தற்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் ஆகிவிட்டது.விஜய்-அஜித் ரசிகர்கள் அடிதடி நடப்பது அதிகம் இல்லையென்றாலும் 
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் சகட்டு மேனிக்கு சண்டையிடுகிறார்கள்.அதுவும் சொந்த வாழ்க்கையை 
விமர்சனம் பண்ணுவது என மிக கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.விஜய்-அஜித் இருவரும் தங்கள் படங்களில் 
பஞ்ச் டையலாக் பேசுவது போல் இருவரின் ரசிகர்களும் பிளெக்ஸ் பேனர்களில் பஞ்ச் டையலாக் பேசுகிறார்கள்.
அதுவும் பேஸ்புக் டிவீட்டர் போன்ற வலைத்தளங்களில் மிக அதிகமான வம்புகள் வருகிறன.அஜித்தின் படம் வெளியாகிறது 
என்றால் அஜித் ரசிகர்கள்.படத்தை வாழ்த்தியும்,விஜய் ரசிகரகள் படம் வருவதர்ற்கு முன்பே விமர்சனம் என்ற பெயரில் 
கேவலப்படுத்துவதும் நடக்கிறது.இதே நிலைமைதான் விஜய் படத்துக்கும் நடக்கிறது. 
ஆனால் விஜய் - அஜித் இருவரும் 
தம்பதி சமேதராய் நிகழ்ச்சிகளும் தங்கள் வீடுகளிலும் சந்தித்து கொள்கிறார்கள்.அஜித்-ஷாலினி ன் பெண் அநோஷ்காவை 
விஜய் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்ததை யூ டுயுப்பில் பார்த்த்ரிப்பீர்கள்.சரி இதோடு பிரச்சனை முடிந்தததா என்றால் 
இல்லையே இப்போது சிம்பு - தனுஷ் தலைமுறை வந்துவிட்டது.எந்திரனில் சிட்டி ரோபோ சொல்வது இந்த நடிகர்களின் சண்டையை 
                                         " யாராலும் அழிக்க முடியாது"

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment