சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jan 2013

" ம்ம்ம் என்ன வாழ்க்கைடா இது ...?


காலைல அடிக்கிற அலாரத்தை ஸ்னூஸ் பண்ணிட்டு இன்னும் பத்து நிமிஷம்  தூங்கலாமேன்னு  நினைப்பதில் தொடங்குது  பெரும்பாலானோரின் காலை வேளை.அப்புறம் அடிச்சு பிடிச்சு ரெடி ஆகி  அம்மா வெந்தும் வேகாம கொடுக்குற டிபனை அவசரமாக முழுங்கிட்டு  குழைந்தையை ரெடி பண்ணி ஸ்கூல விட்டுட்டு  ஆபிஸ் கிளம்பனும்
எல்லா முடிச்ச்ட்டு  வந்தா  டிராபிக்ல  10 நிமிஷம் லேட்.என்னிக்கும் லேட்டா வர்ற மேனேஜர்  நாம லேட்டா வரும் போது முன்னாடியே வந்திருப்பாரு.உள்ள பம்மி பதுங்கி போறதற்குள்ள அதுக்குன்னே ஆபிஸ்ல  ஒரு  எட்டப்பன் இருப்பான்.
"சார் மேனேஜர்  உங்கள கூப்பிடுறாரு.." 
"இதோ போறேன் சார்" னு சொல்லிட்டு  என்ன பதில் சொல்றதுன்னு  மனசுக்குள்ள யோசிச்சுட்டே போகணும்.
"வணக்கம் சார் "
"ம்ம் , என்னையா எப்பவும் இப்படிதான் லேட்டா வர்றியா?"
"ஐயோ சார்,அப்படியெல்லாம் இல்ல சார்,இன்னிக்கு டிராபிக்ல மாட்டிட்டேன் சார்,அதான் 10 நிமிஷம் லேட் ஆயிடுச்சு சார்,சாரி சார்."
"என்னயா  டிராபிக் நானும் அதே வழிலதான் வர்றேன்,நான் நேரத்துல வந்துட்டேன்,காலைலேயே  பொய் பேசுறயா?" இன்னிக்குனு பாத்து ஒரு முக்கியமான வேலையை உன்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன்,ஆரம்பமே சரியில்ல..!
"சாரி சார்,இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன்"
"ம்ம் ஓகே " அப்படின்னுட்டு அந்த பைல் எடு,இந்த பில் எடுன்னு அரைமணி நேரம்  அலைய விட்டு  ரெண்டு நாள் கழிச்சு அனுப்ப வேண்டிய பைலை இன்னிக்கே அவசரமா அனுப்பனும்னு  சொல்வான்.
கடுப்புல அதை வாங்கிட்டு டேபிளுக்கு வந்தா அப்பத்தான் என் டேபிளுக்கு எதிர்ல இருக்கும் பொண்ணு கூப்பிட்டு " சார் ஒரு உதவி"னு கூப்பிடும்.இருந்த அத்தனை கோபமும் பறந்து  போய்டும்.
அப்புறமென்ன அந்த பொண்ணு கேட்ட கேள்விக்கு அதுக்கு புரிந்திருந்தாலும் விடாம ரெண்டு மூணு தடவ எக்ஸ்பிளைன் பண்ணிட்டு வந்து என் டேபிளில் உட்கார்ந்தேன்.
அப்போதான் மேனேஜர் கொடுத்த பைல் நினைவே வந்தது.உடனே அதுக்கு என்னவெல்லாம் பண்ணனும்னு  யோசிக்கும் போது ஓசி டீ குடிக்கிறக்குனே ஒரு நண்பன் இருப்பான்.அவன் வந்து " என்னடா மாப்ள,நல்ல ஜாலி மூட்ல இருப்ப போல,பாப்பா என்ன சொல்லுது"
"ஒண்ணும் இல்லடா ஒரு டவுட் கேட்டா,சொன்னேன் அவ்ளோதான்"
அப்பிடியா  சரி வா கேண்டீனுக்கு டீ சாப்ட போலாம்"
ஆகா இன்னிக்கு இவனே கூப்பிடுறானே இன்னிக்காவது இவன் காசுல டீ குடிப்போம்னு  நினைச்சுட்டு கேண்டீனுக்கு ரெண்டு பேரும் போவோம்.அங்க போனா இவ்ளோ நேரம் நான் பேசிட்டு இருந்த பொண்ணு இன்னொருத்தன் கூட பேசிட்டு இருக்கும்.மேனேஜர் ஏத்திவிட்ட டென்சன் மறுபடியும் வந்திரும்.அவங்க பக்கத்துலையே போய் உக்காந்துட்டு அவனையே முறைச்சு பாத்து மனசுக்குள்ள திட்டிட்டே நண்பன்கூட பேசினேன்.நான் அவனை முறைப்பதை அந்த பொண்ணோட பிரண்ட் பாத்துட்டு இன்னும் அதிகமா அவளோட கடலை போடுவான்.இன்னும் பிபி ஏறும்.இதுல டீ குடிக்க லேட் ஆயிடும்.டீ குடிக்கலாம்னு கூட்டிட்டு வந்தவன் "மச்சி ஒரு சின்ன வேலை,அர்ஜெண்டா போகணும்"னு  பதில் சொல்வதற்குள் எந்திரிச்சு ஓடிடுவான்.
"அடப்பாவி நம்பி வந்தனே இன்னிக்கும் ஒசிலையே குடிச்சுட்டு போயிட்டானே
பணத்தை கொடுத்துட்டு ஆபிசுக்கு வந்தா மேனேஜர் கொடுத்த பைலை காணோம்.
"அய்யயோ போச்சே ,இந்த ஆள் காலைலேயே மானத்தை வாங்கிட்டான்.இப்போ  பைலை காணோமுன்னு தெரிஞ்ச அசிங்கமாயிடும்மேன்னு  அவசர அவசரமா தேடினேன் .என் டேபிள்,டிராயர் ரேக் எல்லா பக்கமும் தேடி கிடைக்கல.சரி எதுக்கும் கேண்டீன்ல போய் பாத்துடலாம்னு அங்கயும் ஒருதடவ பாத்துட்டு வந்துட்டேன்.கிடைக்கவே இல்ல.சரி என்ன நடந்ததுன்னு யோசிச்சு பார்த்தேன்.
என்னாச்சு ,மேனேஜர்கிட்ட பைலை வாங்கிட்டு வந்தேன்.இவன் வந்து டீ சாப்பிட கூப்பிட்டான்.போய் டீ சாப்பிட்டோம்.காசு கொடுக்காம ஏமாத்திட்டு ஓடிட்டான்.மறுபடி டேபிளுக்கு வந்து பாத்தா பைலை காணோம்.எங்க போச்சு,இன்னும் என்ன பண்ணினேன்.
அப்போ அந்த பிகர் வந்து "சார் இந்த பைலை நீங்களா என் டேபிளில் வைச்சிங்க"னு கேட்டுச்சு.என்ன பைல் னு பாத்தா அட மேனேஜர் எனக்கு கொடுத்த அதே பைல் 
"அடடா  இததான் தேடிட்டு இருக்கேன்,உங்க டேபிளுக்கு எப்படி வந்துது "
சார் நீங்கதான் வச்சுட்டு வந்துட்டீங்க"
" சாரி எதோ ஒரு நியாபகத்துல வச்சுட்டு வந்துட்டேன்,தேங்க்ஸ்"
"பரவால்லை சார் "னுட்டு அந்த பொண்ணு அதோட டேபிளுக்கு போய்டுச்சு.
சரி வேலைய பாக்கலாம்னு உக்காந்தா லஞ்ச் டைம் வந்திருச்சு.சரி அதாவது ஒழுங்கா பண்ணுவோம்னு லஞ்ச் சாப்பிட போனேன்.அங்க அதுக்கும் மேலே இருக்குது.கேண்டீன்ல  கடலை போட்டவன் விடாம இங்கயும் வந்து கடலை போடுறான்.எல்லாத்தையும் சகிச்சுகிட்டு சாப்பிட்டு முடிச்சுட்டு டேபிளுக்கு வந்தேன்.அப்போதான் மேனேஜர் லஞ்சுக்கு போறார்.
"உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு" ங்கிற பழமொழிக்கு தகுந்த மாதிரி தூக்கமா வந்துச்சு.அப்பிடியே கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்.டீய குடிச்சுட்டு ஓடிப்போனவன் அப்போதான் வந்தான்.ஏன்னா அடுத்த டீ டைம் வந்திருச்சு.
"டேய் மச்சி எழுந்திருடா,மேனேஜர் வர்ற டைம் ஆயிடுச்சு"
"இவ்ளோ நேரம் தூங்கிட்டனா,இவ்ளோ நேரம் எங்கடா போனே நீ"
" மச்சி ஒரு பிரெண்ட பக்க போனேண்டா"
"சாப்பிடாம கூட போகனுமா?"
"இல்ல மச்சி அப்பிடியே பாய் கடைல லஞ்ச் முடிச்சுட்டு வந்துட்டேன் "  
அதானே கொய்யாலே ஓசில லஞ்சு சாப்பிட தான் அவன பாக்க போயிருக்கான்.
"சரி மச்சி வா டி டைம் ஆயிடுச்சு தூங்காத,ஒரு டீ சாப்பிட்டு வரலாம்.
வேற வழி பொய் டீ "வாங்கி கொடுத்துட்டு "வந்தேன்.
அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் அரட்டை பேஸ்புக்,டிவீட்டர் பார்த்ததும் 6 மணி ஆயிடுச்சு.
அப்போதான் மேனேஜர் கொடுத்த "அர்ஜெண்ட்" பைலின் நியாபகம் வந்தது.
ம்ம்ம் சரி இனி எங்க அந்த வேலையை முடிக்கிறது.நாளைக்கு பாத்துக்கலாம்னு வீட்டுக்கு கிளம்பி போனேன்.
வீட்டுல அம்மா "என்னடா சீக்கீரம் வந்துட்ட,சரி வா மளிகை சாமான் கொஞ்சம் வாங்கணும்."
அண்ணாச்சி கடை வரை போயிட்டு வந்திருலாம்."
 "வேலை ஜாஸ்திமா டயர்டா இருக்கு
அப்புறமென்ன சாப்பிட்டுட்டு தூங்க வேண்டியதுதான்.
அடுத்த நாள் காலையில் அதே போல  ஆபிசுக்கு லேட்டாத்தான்  போனேன்.
இன்னிக்கு மேனேஜர் வரல.10மணிக்கு வந்தததும் என்னை கூப்பிட்டு 
"என்னையா  அந்த பைலை அனுப்பிச்சுட்டியா?"
"சாரி சார் அனுப்ப முடியல இன்னும் கொஞ்ச வேலை இருக்கு சார்"
"யோவ் நேத்து அது ஒரு வேலை மட்டும் தான் இருந்தது,அதையும் முடிக்கலையா 
நேத்து ஆபிஸ்ல என்னதான்யா பண்ணினே "
"சார் அது வந்து ......"
"என்னயா அது இதுன்னு இழுக்கற பதில் சொல்லுயா"
என்னனு நான் பதில் சொல்லுறது.இந்த ஆளுகிட்ட தப்பிக்க ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்.
இப்படி ரணகளமா தாங்க போயிட்டு இருக்கு என் வாழ்க்கை.
" ம்ம்ம் என்ன வாழ்க்கைடா இது ...?

No comments:

Post a Comment