சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jan 2013

தன்னம்பிக்கையின் மறு உருவம்


      
       அலெக்ஸாண்ட்ரா ஸ்காட் என்கிற தன்னம்பிக்கை  குழந்தை  பிறந்த தினம் இன்று (ஜன.18). காரணம்… 'Neurobalstoma’ என்கிற ஒரு வகையான நரம்புப் புற்றுநோய் அவளை ஒரு வயதில் தாக்கியது. மற்றவர்களின் உதவி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. நகரவே முடியாது. வலி பின்னி எடுக்கும். அவளின் தாய், தந்தையிடம் எப்போதும் உற்சாகமாகப் பேசியபடியே இருக்கும் அவளுக்கு, உடம்பு முழுவதும் ஊசிகள் போடப்பட்டன. பல இடங்களில் கத்தியால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அப்போது எல்லாம், எல்லை இல்லாத மன தைரியம் காட்டிய அந்தச்  குழந்தைக்கு, ஒரு சிந்தனை தோன்றியது.

       அவளுக்கு எலுமிச்சை ஜூஸ் என்றால் அப்படி ஒரு விருப்பம். ‘தனக்கு செலவு செய்ய பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், இதேபோல் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு நாம் உதவ என்ன செய்யலாம்?' என யோசித்தாள். தன் பெற்றோரை ஒரு எலுமிச்சை ஜூஸ் கடை ஆரம்பித்துத் தரச் சொன்னாள். அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு  பயன்படுத்தப் போவதாக அறிவித்தாள். 

         இதை மாதிரியாக கொண்டு பல்வேறு கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம், ஒரு வருடத்தில் பத்து லட்சம் டாலர் பணம் திரண்டது. அதைப் பார்க்க அலெக்ஸாண்ட்ரா உயிருடன் இல்லை. எட்டு வயதில் இறந்துவிட்டாள். ஆனால், அவளின் அந்த எலுமிச்சை ஜூஸ் கடைகளில் வரும் வருமானம் இன்றும் கேன்சரால் வாடும்  குழந்தைகளுக்கு  ஆதரவு தருகின்றது

           வயதில் பெரியவர்களே தங்களின் துன்பத்தை, நோயை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத நிலையில் இந்த குழந்தை தன்னம்பிக்கையுடன்  மற்றவர்களுக்கு உதவ நினைத்தது தான் அவளை இன்னும் மக்கள் மனதில் "வாழ" வைத்துள்ளது. நம் தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

" செத்தும் கொடுத்தான் சீதக்காதி " என்று. அதற்க்கு உதாரணமாக  இருக்கிறாள் அலெக்ஸாண்ட்ரா ஸ்காட்.அந்த அற்புத தேவதையை அன்போடு நினைவுகூர்வோம்.நம் பிள்ளைகளுக்கும் அந்த தேவதையின் வாழ்க்கையை எடுத்து சொல்லி தன்னம்பிக்கையோடு வளர்ப்போம்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

 
 

No comments:

Post a Comment