சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jan 2013

விமானத்தை ஓட்ட மறுத்த பெண் பைலட்

         ஜோத்பூரில் ஆர்டர் செய்திருந்த, கச்சோரி தின்பண்டத்தை வாங்க முடியாமல் போய்விடும் என்பதற்காக, வேறு வழிப்பாதை விமானத்தை ஓட்ட மறுத்த, பெண் பைலட் மீது, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.கச்சோரி என்பது, சமோசா போன்ற ஒரு தின்பண்டம். உருண்டை வடிவில், உட்புறம் மசாலா வைத்து, எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் கச்சோரியின் சுவைக்கு, வட மாநிலத்தவர்கள் அடிமை.
            
             "ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தின், பெண் பைலட், கேப்டன், ஸ்மிருதி திரேஹனுக்கு, கச்சோரி மீது, கொள்ளை பிரியம். ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூரில் உள்ள தின்பண்ட கடை ஒன்று, கச்சோரி தயாரிப்பில் புகழ் பெற்றது. மும்பையில், ஓட்டலில் தங்கியிருந்த பைலட் ஸ்மிருதி, கடந்த ஞாயிறு அன்று காலை, ஜோத்பூர், கச்சோரி கடைக்கு போன் செய்து, "மதியம், 3:00 மணிக்கு, ஜோத்பூர் விமான நிலையத்தில், நான்கு செட், கச்சோரி, தர வேண்டும்' என, "ஆர்டர்' செய்தார்.வழக்கமாக அவர், மும்பை - ஜோத்பூர் விமானத்தை, பகல், 2:00 மணிக்கு இயக்கி வந்த நிலையில், ஞாயிறு காலை, "ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தினர், ஸ்மிருதியிடம், "நீங்கள் வழக்கமாக இயக்கும், ஜோத்பூர் விமானத்திற்கு பதிலாக, பகல், 12:00 மணிக்கு, டில்லி செல்லும் விமானத்தை இயக்க வேண்டும்; எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடுங்கள்' என, தகவல் தெரிவித்தனர்.

          டில்லி விமானத்தை இயக்கினால், சூடான கச்சோரியை சாப்பிட முடியாதே என, எண்ணிய ஸ்மிருதி, "தகவல் கிடைக்கவில்லை என சொல்லி விடலாம்' என, முடிவு செய்து, வழக்கம் போல், 2:00 மணிக்கு இயக்கப்படும், ஜோத்பூர் விமான நேரத்திற்கு, விமான நிலையம் சென்றார்.இதனால், 12:00 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானத்தை இயக்க, பைலட் இல்லாமல், பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 3:00 மணிக்கு, வேறு ஒரு பைலட்டை அழைத்து வந்து, டில்லி விமானம் புறப்பட்டு சென்றது.இது குறித்து விசாரணை மேற்கொண்ட, விமான நிலைய அதிகாரிகள், ஸ்மிருதியின், கச்சோரி ஆர்டரை கண்டுபிடித்தனர்.மும்பையிலிருந்து ஜோத்பூருக்கு விமானத்தை இயக்கிய ஸ்மிருதி, ஜோத்பூர் சென்றதும், அவசரமாக இறங்கி, விமான நிலைய வாசலில் காத்திருந்த, கச்சோரி கடை பையனிடம், "பார்சலை' வாங்குவதை, கேமரா காட்சிகள் மூலம் பார்த்த அதிகாரிகள், அவர், டில்லி விமானத்தை இயக்காததன் காரணத்தை அறிந்தனர்.இதையடுத்து, ஸ்மிருதி மீது, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் அலட்சியம்தான் இந்த செயல். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணத்துக்கு காத்திருக்கும்  பயணிகளை பற்றி கவலை இல்லை. இதனால் எத்தனை பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள்.இனி இதற்க்கு ஒரு விசாரணை கமிஷன் ஆண்டுக்கணக்காக விசாரிக்கும்.என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து? என்று நினைத்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க போகவேண்டியதுதான்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment