டைரக்டர் A.L.விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு " தலைவா " என பெயரிடப்பட்டுள்ளது. முன்பு ரஜினியின் " தங்கமகன் " என பெயரிடப்பட்டிருந்தது. A.L. விஜயின் ஆஸ்தான நாயகி " அமலா பால் " விஜயுடன் நடிக்கிறார்.
மிக சமீபத்தில்தான் முதற்கட்ட படபிடிப்பு மும்பையில் முடிவடைந்தது.வரும் மார்ச் மாதம் இரண்டாம் கட்ட படபிடிப்பு பாடல் காட்சிகளுக்காக ஸ்பெயினில் நடக்க இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
G.V.பிரகாஷ் இசையில் நீரவ் ஷா கேமராவில், ஆண்டனியின் படத்தொகுப்பில்
படம் உருவாகிறது. சத்யராஜ்,மனோபாலா,சந்தானம், சுரேஷ் மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். காவலனுக்கு பிறகு விஜய் தன் வழக்கமான படங்களில் இருந்து சற்று மாற்று ( நண்பன்,துப்பாக்கி ) பாதையில் செல்கிறார்.
No comments:
Post a Comment