சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

நாராயணசாமி 1



 போலிஸ்காரரிடம் நம்ம நாராயணசாமி,

"ஐயா... ஐயா, கடந்த வாரம் எங்க வீட்டுல திருடிட்டு போன திருடனை எப்படியாவது பிடிச்சு கொடுத்துடுங்க"


"வருத்தப்படாதீங்க மிஸ்ட்டர் நாராயணசாமி... கண்டிப்பா பிடிச்சிருவோம்... ஆமா உங்க வீட்டுல இருந்து விலையுயர்ந்த பொருள் ஏதும் திருட்டு போகலியே அப்பறம் ஏன்யா இந்த அவசரம்?"


"இல்லைங்க, அவன் எப்படி ராத்திரி என் மனைவிக்கு தெரியாம வீட்டுக்கு உள்ள வந்தான்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். என்ன நேரமாச்சின்னா உள்ள விடமாட்டேங்குறா"


நாராயணசாமி ஒரு நாய் வளர்த்தார்.

அந்த நாய்க்கு வால் இல்லை...யாரோ வெட்டிட்டு போயிட்டாங்க.

"இந்த நாய் தான் எனக்கு குரு...இதுகிட்டயிருந்து நான் நிறைய பாடம் கத்துகிட்டிருக்கேன்"னு தன்னை பாக்குறவங்ககிட்டயெல்லாம் சொல்லிகிட்டேயிருப்பார் நாராயணசாமி.


"
அப்படியா...அப்படி என்ன கத்துகிட்டீங்க"ன்னு கேட்டார் ஒருத்தர்.

அதுக்கு நாராயணசாமி சொன்னார்,

"
யாருகிட்டயும் வாலாட்டக்கூடாதுன்னுதான்"


நாராயணசாமி புதுசா ஒரு ரோபோ வாங்கிட்டு வந்தாரு. அதன் ஸ்பெஷல் என்னன்னா யாராவது பொய் சொன்னா அது பளார் என்று அரையும்.

நாராயணசாமி : - ஏன்டா லேட்?

மகன்: - டியுசன் போயிடு வாரேன்பா.

( உடனே அந்தே ரோபோ மகனை பளார் என்று அரஞ்சது)


நாராயணசாமி: - ஏன்டா 18 வயசிலேயே பொய் பேசுற. நான் எல்லாம் வாழ்கையில் பொய்யே பேசினது கிடையாது.

" பளார் " 

இப்போ அரை வாங்கினது நாராயணசாமி.



நம்ம நாராயணசாமி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். 

இரவில் தங்க ஒரு ரோட்டோர விடுதியை அடைந்தார். 

அந்த விடுதியின் பெயர் "மலைக்கள்ளனும், பெண்சிங்கமும்" என்றிருந்தது. 

அழைப்பு மணியை அடித்தவுடன் ஒரு பெண் பாதி கதவைத் திறந்தாள். 

நாராயணசாமியால் அவள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.

நாராயணசாமி : ரூம் இருக்குமா..?

பெண் : இல்லை என்றாள் முகத்தில் அடித்தாற் போல்.

நாராயணசாமி : சாப்பிட ஏதாவது..?

பெண் : எரிச்சலுடன் "இல்லை"

நாராயணசாமி : குடிக்க ஏதாவது கிடைக்குமா..?

பெண் : சிறிதே கோபத்துடன், "இல்லைய்யா..."

நாராயணசாமி : வராண்டாவில் படுத்துக் கொள்ளட்டுமா..?

பெண் : கோபத்துடன் "இல்லை" என்றபடி கதவை மூட எத்தனிக்க..

நாராயணசாமி : ஒரு நிமிஷம்..

பெண் : "இப்போ என்ன வேணும்" என்று கர்ஜித்தாள்..

நாராயணசாமி : மலைக்கள்ளன் ஐயா கிட்ட பேசலாம்களா..?

1 comment: