சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2013

தமிழனா கொக்கா ??


ங்கொய்யாலே தமிழனா கொக்கா ??

நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்)‘தம்அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............இல்லையா?..

அடக்கொடுமையே.. வாழ்க்கையில இதெல்லாம் சிறுசிறு இனபம் சார்.

உடனே, ப்ளைட் டிக்கெட் புக் பண்ணி, போகப்பாருங்க. 

இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ..............டிய உருவிவிட்டுஅடிப்பான். எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்.. 

ஆனா, ஜனநாயக கடமைனு ஒண்ணு இருக்கே.. அதைப் பண்ணாட்டி, தெய்வக்குத்தம் ஆகிவிடுமோனு பயந்து, உயிர் பயமில்லாம இங்க பதியறேன்..

அன்று அப்படித்தான், அவரு, தம் அடிச்சுட்டு, அடுத்த எலெக்ஷம் முடிச்ஞதும், தமிழநாடு முன்னேறுமா?.. இல்ல பின்னேறுமானு தீவிர சிந்தனை பண்ணிக்கிட்டு போயிட்டு இருந்திருக்காரு..

தும்மல், வந்தா தும்மனும். பிகர் வந்தா சைட் அடிக்கணும் , கடன்காரன் வந்தா ஓடி ஒழியனும் .. அதுபோல, சிகரெட் குடிச்சு முடிஞ்சதும், என்ன பண்ணுவோம்?????.

தூக்கி வீசுவோம்.. (குட அலர்ட்டா தான் இருக்கீங்க )

சராசரி மனிதனா, அதைதான் பண்ணியிருக்காரு நம்ம தலைவரு..

ஆனா..வந்து சுத்தி வளைச்சிடானுக ஆபீஸர்ஸ்.. நம்ம தலைவரு.. என்னாடா, குண்டு வீசினமாறி பயப்பட்டு, இவ்வளவு பேர் வந்திருக்கானுக?. என்னா விசயம்னு கேட்க, அவனுக , ஒரு வெள்ளப்பேப்பர்ல, அவரு பேரு, வயசு..கட்டவேண்டிய பைன்னு எழுதி கொடுத்திட்டு , அடுத்த ஆளை பிடிக்க போயிட்டாங்க..

அவரும். சரி கர்மத்தை கட்டிடலாமுனு பார்த்தா, அய்யோ... $500..
(
ஹா.ஹா.. ரெண்டாவது தடவை மாட்டினா, $500ஆம்.. முதல் முறை குற்றத்துக்கு , $300.. நம்ம தல, போன வருஷமே, மாட்டி, $300 கட்டின பார்ட்டி.. ”பழைச மறக்கனுமுனு, யாரோ சொன்னதை கேட்டு, அதையும் மறந்துவிட்டது போல.. ஹா.ஹா. )

விதி கொடியது.. கட்டலேனா, கோர்ட் போகனும் .. அங்க போனா, ஈசியா $2000 கட்டச்சொல்லுவாங்க.. வேற வழியில்லாம $ 500 கட்டுனாரு 

இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு . (ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் )

கடைசில பளீர்ன்னு மூளைல பலப் எரிஞ்சது , நேரா கிளம்பி சந்தோசா ஐலேண்ட் போனாரு , அங்க போயி நைசா பார்க்குக்குள்ள ஒரு வாட்டி உச்சா போனாரு, அப்படியே ஒரு 2 லிட்டர் கூல்ட்ரிங்க்ஸ் வங்கி புல்லா குடிச்சிட்டு(?????) ஒரு தம்ம போட்டாரு . இந்த தம்ம கரக்ட்டா டஸ்ட்டு பின்னுள்ள போட்டு மறுபடியும் அந்த பார்க்குக்குள்ள போயி உச்சா போனாரு . 

ஹா,ஹா.ஹா,............ இப்போ அவனுகளையும் பழிவாங்கியாச்சு , $700 டாலரும் மிச்சம் பண்ணியாச்சு . தக்காளி யாருகிட்ட விளயாடுரிங்க நாங்கல்லாம் தன்மான தமிழர்கள் ....விடுவமா ....ம்ம்ம்ம்ம்..........

எனக்கு மண்ட காஞ்சு போச்சு என்னா தல எப்படி $700 மிச்சம்ன்னு கேட்டேன் .....

அது வேற ஒன்னும் இல்லை இங்க உச்சா போனா முதல் வாட்டி $500 பைன் , ரெண்டாவது வாட்டு $1000 டாலர் பைன் , நான் பைன் கட்டாம ஏமாத்தி ரெண்டு வாட்டி உச்சா போயிட்டேன் . அப்போ நமக்கு $1500 லாபம் , முன்னாடி தம்மடிச்சதுக்கு $800 கட்டினேன் ....இப்ப கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்

ங்கொய்யாலே தமிழழழழழழழன்டா 

No comments:

Post a Comment