சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jan 2013

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா போட்டோ ஷூட்        சுந்தர பாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன்  அடுத்து உதயநிதியை வைத்து "கதிர்வேலின் காதலி"படத்தை இயக்குகிறார்.இது காதலுடன் கொஞ்சம் ஆக்சனும் உள்ள கதையாக உருவாக்கி இருக்கிறார்.உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

"ஒரு கல் ஒரு கண்ணாடி"யிலேயே  நயன்தாரா தான் நடிக்க வேண்டியதாம்.
அப்போது நயன்தாரா பிரபுதேவாவை காதலித்துக் கொண்டு இருந்ததால் 
அதில் நடிக்க ஒத்து கொள்ளவிளையாம்.தற்போது உதயநிதி கேட்டுக் 
கொண்டதால் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
தற்போது இந்த படத்தின் போட்டோ ஷூட்  நடந்து முடிந்துள்ளது.
நயன்தாராவும் உதயநிதியும் மிக நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர்.
உதயநிதி கூச்சப்பட நயன்தாரா தான்  தைரியம் சொல்லி உற்சாகமாக நடிக்க வைத்தாராம்.


 
 
நயன்தாராவுடன் ஜோடி சேருவது குறித்து உதயநிதி அளித்துள்ள பேட்டியில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப்போல் இதுவும் ஜனரஞ்சகமான படம். கதை இருக்கிறது. காமெடி இருக்கிறது. குடும்பப்பாசமும் இருக்கிறது. திரைக்கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. நயன்தாராவிடம் கதை சொல்லப்பட்டு விட்டது. அவருக்கு கதை ரொம்ப பிடித்து இருக்கிறது. நயன்தாரா ஒரு புகழ்பெற்ற நடிகை என்ற வகையில், அவருடன் ஜோடியாக நடிக்க கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment