இது புரிந்து கொள்ள மட்டுமே.பிரச்சனையை பெரிதுபடுத்துவதைவிட முடிப்பதற்கான வழியை சிந்தியுங்கள் நண்பர்களே
விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லீம் சகோதரர்களின் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஒரு விமர்சனத்துக்கோ அல்லது கண்டனத்துக்கு குறிப்பிட்ட வரம்பு உள்ளது.
அந்த வரம்புக்குள் தன் எதிரியை அல்லது சம்பந்தப்பட்டவரை விமர்சிக்க வேண்டுமே தவிர அதை விடுத்து மிக கொடிய வார்த்தைகளால் விமர்சிப்பது எதிரிக்கு பதில் சொல்ல தெரியாதவனின் கையாலாகத்தனம்.
நேற்று மண்ணடியில் நடந்த கூட்டத்தில் "விஸ்வரூபம் அடுத்து என்ன"எனும்
தலைப்பில் பேசிய பி.ஜைனுல் ஆபிதீன் பாரதிராஜாவின் குடும்பத்தையும்
ஸ்ருதிஹாசனையும் பற்றிஎவ்வளவு ’’நாகரிகமா’க’ விவாதித்தார் வீடியோவில் பார்த்து வேதனைப்பட்டேன்.நீ உன் குடும்பத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா?என பாரதிராஜாவையும், நீ உன் அப்பனுடன் படுக்க ஆசைபடுகிறாயா ? என்று ஸ்ருதிஹாசனையும் கேட்கிறார். ஒரு பழுத்த அரசியல்வாதியும் முஸ்லிம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை.நபிகள் நாயகத்தின் போதனைகளை படித்தவர் இப்படி பேசலாமா?இதற்கு பதிலடி கொடுப்பது போல் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் பேசினால் என்னவாகும் என யோசித்து பார்த்தாரா? என் தெரியவில்லை.அவர் கேட்ட அதே வார்த்தையை கமலஹாசனோ அல்லது அவரது பெண்ணோ பேசியிருந்தால் இந்துக்களும் , முஸ்லிம்களும் அடித்து கொண்டிருப்பார்கள்.நீங்கள் உங்கள் வீட்டில் பதுங்கி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்திருப்பீர்கள்.அப்பாவி இந்துக்களும் ,முஸ்லிம்களும் பாதிக்க பட்டிருப்பார்கள். நீங்கள் சிலரின் முன் ஹீரோவாக அப்பாவி மக்களை பலியாக்காதீர்கள்.
விஸ்வரூபம் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.ஆனால் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் வெளியாகிவிட்டது.படத்தை பார்த்த எனது முஸ்லிம் நண்பரே பேஸ்புக் வலைத்தளத்தில் அப்படி தவறான கருத்து எதுவும் இல்லை என கூறியிருக்கிறார்.ஆப்கான் தீவிரவாதத்தையும்,அங்கு நடக்கும் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை பற்றியுமே படம் நகர்கிறது.கதைப்படி தீவிரவாதிகளின் தலைவன் கமலிடம் தமிழில் பேசுகிறார்.நீங்கள் எப்படி தமிழ் பேசுகிறீர்கள் என கலஹாசன் கேட்கும் போது அவன் ( மன்னிக்கவும் இதற்கும் பிரச்சனை ஆகிவிடபோகிறது) அவர் தமிழ் நாட்டில் கோவை மதுரை போன்ற இடங்களில் சில காலம் பதுங்கியிருந்தேன் என கூறுகிறார்.அவ்வளவுதான்.இதில் ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் முஸ்லிம்களையே தவறாக கூறியது போல் நீங்கள் என் கொந்தளிக்கிறீர்கள்.இதைவிட கொடுமை இதை சொன்ன என் முஸ்லிம் நண்பரை நீ இஸ்லாமியனே அல்ல என தூற்றுகின்றனர்.
அடுத்து கமல் என்ன படம் எடுத்தாலும் வெளியாகும் சமயத்தில் அதற்க்கு
தொந்தரவு செய்தால் நாமும் பிரபலம் ஆகிவிடலாம் எனும் போக்கு
தற்போது அதிகரித்து வருகிறது. விருமாண்டி படத்திற்கு முதலில் "சண்டியர்"
என பெயர் வைத்து இருந்தார் அதை மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர். படம் வந்ததும் தான் தெரிந்தது அது மரணதண்டனை வேண்டாம் என கருத்து சொல்ல பட்ட அருமையான திரைப்படம்.அடுத்து வசூல்ராஜா MBBS.
மருத்துவர்களை தவறாக சித்தரிக்கிறார் என மருத்துவர்கள் போராட்டம் செய்தனர்.மறுபடியும் கமலஹாசன் அவர்களின் முகத்தில் கறியை பூசினார்.மருத்துவர்கள் நோயாளிகளிடம் எப்படி பழக வேண்டும் என மருத்டுவ்ர்களுக்கே பாடம் நடத்தினார்.ofcourse
அது ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் விஜயகாந்தின் "ரமணா" வில் மருத்துவத்துறையின் மறுமுகத்தை கிழித்து எறிந்தார்களே அப்போது எந்த போராட்டமும் இல்லை.அதே போல்தான் இதுவும் விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் வெளியாகாமல் போகாது.அதை பார்த்து விட்டு எந்த முஸ்லிம் தோழனும் வருத்த பட்டால் அனைத்து இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம்.இதை என் இஸ்லாமிய நண்பரின் வார்த்தைகளிலேயே
உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.
“பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம். இந்தியத் திருநாட்டில் அப்போது இருந்த 10 கோடி முஸ்லீம்கள் வருத்தப்பட்டார்கள்என்றால் அதே நேரத்தில் 50 கோடி இந்துக்கள் அதைவிட அதிகம் வருத்தப்பட்டார்கள், எதிர்த்தார்கள். அதனால்தான் இன்றுவரை பி.ஜே.பியால் மெஜாரிட்டி ஆட்சி இந்த தேசத்தில்அமைக்க முடியவில்லை. இது அப்பட்டமான நாம் நம் வாழ்நாளில் கண்ணால் கண்ட, கண்டுகொண்டு இருக்கின்ற உண்மை. படம் வரட்டும். அதில் தவறு இருந்தால் நம்மைவிட நம் மாற்று மத சகோதரர்கள் அதிதீவிரமாக எதிர்ப்பார்கள்.நான் என் உடன் பிறந்த சகோதர்களைவிட உடன்பிறவா சகோதர்களை அதிகம் நம்புகிறேன்.”
என்று கூறியிருக்கிறார் என் நண்பர். அவரின் வார்த்தைகளை நாங்கள் மதிக்கிறோம்.
"படத்தில் தவறு இருந்தால்" அனைத்து இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம்.
மிகச்சரியாக கூறினீர்கள்...
ReplyDeleteநண்பரே உங்களின் அதே வாதத்தை டேம் 999 படத்துக்கும் உபயோகபப்டுத்தலாமே
ReplyDeleteபடம் வெளீவரட்டும் முவஸ்லிம் கள் எபொதும் இப்படி தான் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் ஏற்கமாட்டார்கள்.
ReplyDeleteபீஜே என்ற தனி மனிதனின் நாகரிகமற்ற பேச்சால் மன உளைச்சலுக்குள்ளானவர்கள் ஏற்றுக்கொள்வார்களானால் அதற்காக மன்னிப்பு கேட்க என்னைப்போன்ற இலட்சகணக்கான முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். ஏனெனில் வாழும் நெறியை உலகிற்கு காட்டி சென்ற இறைத்தூதரின் வழிகாட்டலில்அமைந்த பேச்சுக்களல்ல அவை என்பதை கூற விரும்புகிறேன்.
ReplyDeleteஅதனுடன் பிரச்சனைக்குரிய கருத்தையும் இங்கு பதிவது கடமையாகிறது. இதுவரையுமான இந்திய சினிமாவின் எழுதப்படாத சட்டமாகவே தீவிரவாதிகளாக சித்தரித்துப்பதற்கு முஸ்லிம்களை பாவிப்பதும், கெட்ட நடத்தையுள்ள பெண்களாக சித்தரிப்பதற்கு கிருத்துவ பெயர் பெண்களை பாவிப்பதையும் காண்கிறேன். அதற்கான எதிர்ப்பு அவ்வப்போது இருந்து வந்தாலும் அரசியல் செல்வாக்கால் "விஸ்வரூபத்தில்" எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே எண்ணுகிறேன். இயக்குனர் அமீரின் கருத்துப்படி "வன்புணர்வுகள் காலங்காலமாக இருந்து வந்தாலும் எவ்வாறு இந்திய அரசியலையே டெல்லியின் ஒரு வன்புணர்வு ஆட்டங்காண செய்தது? என்ற கேள்விக்கு விடை காண முடியாதோ, அது போன்றே விஸ்வரூபத்திற்குமான எதிர்ப்புக்கும் கேள்வி கேட்க முடியாது" என கூறியிருக்கின்றார்.
இது கமலுக்கு எதிரான போராட்டமல்ல இந்திய சினிமாவுக்கு எதிரான போராட்டமாகவே கருத வேண்டியுள்ளது. இருந்தும் இத்திரைப்படத்தில் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செய்தி ஒன்று பதிவாகயுள்ளதை அறிகிறோம். அதுவே திருமறைக்குர்ஆன் வரிகளுக்கு தவறான பொருள் விளக்கம் கொடுபட்டுள்ளது என்பதே. முஸ்லிம்களின் உணர்வுகளையும் வலிகளையும் மற்றவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது.
Mohamed அவர்களே நான் படத்தை பார்க்கவும் இல்லை,ஆதரிக்கவும் இல்லை,ஒருவரை
ReplyDeleteபற்றி தெரிந்திருந்தால் மட்டுமே அவரை விமர்சிக்க நமக்கு தகுதி உண்டு. அதே போல
அவரை எதற்கு விமர்சனம் செய்கிறோமோ அதை விட்டு விட்டு வேறுவிதமான
முறையில் தகாத வார்த்தைகளை பயன் படுத்துவது அநாகரிகம்.அதுவும் பேசியவர்
அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்.அதை தான் நான் தவறு என
கூறுகிறேன்
யாகாவராயினும் நா காக்க
ReplyDeleteவாயை மூடினால் சலாமத் வழி என்று எனதருமை துணைவி அடிக்கடி சொல்வார்கள் . உண்மைதான்
"ஒரு பழுத்த அரசியல்வாதியும் முஸ்லிம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை.நபிகள் நாயகத்தின் போதனைகளை படித்தவர் இப்படி பேசலாமா?" என்று பி.ஜே.வை பார்த்து கேட்கப்படும் கேள்வி இது. அவரை இவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பது தான் உங்கள் வேதனைக்கு காரணம். அவர் "நபி வழி" என்று மேடையில் பேசுவாரே தவிர உண்மையில் அவர் அப்படி நடப்பதில்லை. நபிகளார் அவர்தம் குடும்பத்தார்கள், சகாபாக்கள் (நபி தோழர்கள்)மற்றும் இறை நேசர்கள் போன்றவர்களையே கண்ணிய குறைவாகத்தான் பேசுவார். அவரிடம் கடுகளவு கண்ணியத்தையோ, நாகரீகத்தையோ, மனித நேயத்தையோ எதிர்பார்ப்பது மிலிட்டரி ஹோட்டலில் இட்லி - சாம்பாரை எதிர்பார்ப்பதை போலத்தான். இனியாவது அவரை புரிந்து கொண்டு அரசியல் வாதிகள் அவரைவைத்து அரசியல் செய்யாமல் இருந்தால் சரிதான். அவரைவைத்து மற்ற முஸ்லிம்களும் அப்படிதான் இருப்பார்கள் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். "இஸ்லாம்" என்றால் "நற்குணம்" என்று பொருள். "நற்குணம்" என்றால் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, ஒருவர் நமக்கு தீங்கிழைத்திருந்தால் அதை மன்னிப்பது "நற்குணத்தின் ஆரம்பம்"; சமயம் வாய்க்கும்போது அவருக்கு நன்மை செய்துவிடுவது "நற்குணத்தின் பக்குவம்" என்று நபிகள் கோமான் பதிலளித்தார்கள். அப்படியிருக்க ஒரு இஸ்லாமியன் நாகரீகமற்ற முறையில் பேசமாட்டான் அப்படி பேசியிருந்தால் அவன் (பெயரளவில் தவிர) இஸ்லாமியனாக இருக்கமாட்டான். அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு இடங்கொடுக்காமல் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக - சகோதரர்களாக - நண்பர்களாக இருந்து நமது நாட்டை அமைதி பூங்காவாக ஆக்குவோம்.
ReplyDelete