சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

ஜாக்கி -THE LEGEND




சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார்.

இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

         குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்கியை குழந்தைகள்தான் கொண்டாடினர். அவர் குழந்தைகளுக்காகவே நடித்தார். அவருடைய சண்டைகளில் மூர்க்கம் இருக்கும்.. ஆனால் வன்முறை இருக்காது! அந்த மேஜிக் ஜாக்கிக்கு மட்டுமே வாய்த்திருந்தது.


        அவருடைய படங்களை பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது, குளுக்கோஸ் டி குடித்த குதூகலத்தை கொடுத்தவர். ஓடும்பஸ்ஸை, தாவிக்குதித்துவிட வேண்டும்போல, நரம்பெல்லாம் உற்சாகம் உறைந்திருக்கும். திரைத்துறையில், சாதிப்பதற்காக தன்னந்தனியாக போராடி, முன்னுக்கு வந்தவர். ரஜினி,கமல் அளவுக்கு, தமிழ்நாட்டில் ஜாக்கிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை சொல்லும்படியான ஒன்று தான்.

           ஒரு கஷ்டமான சண்டை காட்சியில் ஜாக்கி நடித்துவிட்டு வந்தததும் நிருபர் ஒருவர் "எதற்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் ,உங்களுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைத்துவிடலாமே ? என்று கேட்டிருக்கிறார்.அதற்க்கு "என்னால் செய்ய முடியாத சண்டை காட்சிகளை என் உதவியாளர்களை ( டூப் ) வைத்து நான் எப்போதும் எடுத்ததில்லை"என்று ஜாக்கி கூறியிருக்கிறார்.அதுதான் உண்மையும் கூட.ஹூ அம் ஐ  படத்தில் மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே சறுக்கி கொண்டே வருவார்.அந்த காட்சி தகுந்த பாதுகாப்புகளோடு தான் செய்யப்பட்டது.இருந்தாலும் பார்க்கும்  போது எந்த பிடிப்பும் இல்லாமல் குதிப்பது போல் தத்ரூபமாக இருக்கும்.அதுதான் ஜாக்கி.

ஜாக்கியின், சமீபத்திய படங்கள் எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை.



கடைசியாக, வெளியான ‘போலீஸ் ஸ்டோரி’ கூட நிறைய சோகமும் கோபமுமாகத்தான் இருந்தது. ஜாக்கியின் படங்களுக்கேயுரிய காமெடியும், ரத்தமில்லாத பரபர சண்டைகாட்சிகளும் மிஸ்ஸிங். கடைசியாக, ‘ஷாங்காய் நூன்’ தான் ஜாக்கிபாணியில் வெளியான, ரசிக்க வைத்த, படம். அது,வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அவருடைய, கடைசி ஆக்சன் படமான CZ12 (சைனீஸ் ஜோடியாக்) சென்றவாரம் வெளியானது.

மிக பிரமாதமான படம்.

ஒவ்வொரு காட்சியிலும், விழுந்து விழுந்து, சிரித்தேன்.

காமெடி படம் தானே, என ஏனோதானோவென்று எடுக்காமல், அதற்குள், ஒரு கருத்தையும் நுழைத்திருக்கிறார் ஜாக்கி! அதற்காக, கருத்து சொல்கிறேன் பேர்வழி என போர் அடிக்காமல், ஆக்சனும் காமெடியும் கலந்து, பரபரப்பான ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார்.

படத்தின் இயக்குனரும் ஜாக்கிதான். சண்டைக்காட்சிகளும் அவருடையதே. ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒரு ஷாட், கூட, படத்தில் வீண் கிடையாது. அவ்வளவு, கச்சிதமான திரைக்கதையமைப்பு. இதுவரை, பார்த்திடாத, லொக்கேஷன்கள். ஸ்டன்ட் காட்சிகள், ஒவ்வொன்றும், அம்மாஞ்சிகளைக் கூட, விசிலடித்து கைத்தட்ட வைக்க கூடியவையாகவும் இருந்தன. மொத்தத்தில், இது, ஜாக்கி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் ட்ரீட்.

இத்திரைப்படத்திற்காக, இரண்டு, கின்னஸ் சாதனைகள, செய்திருக்கிறார் ஜாக்கி. அதில், ஒன்று ஒரே படத்தில், அதிக ஸ்டன்ட்களில் நடித்தவர் (Most Stunts Performed by a Living Actor), இன்னொன்று ஒரே படத்தில் அதிக வேலைகளை செய்தவர் (Most Credits in One Movie)! இதெல்லாம், நிறையபேர் செய்யக்கூடியதுதானே என்று தோன்றலாம்.

ஜாக்கிசானுக்கு வயது 58!


இந்த வயதில், நாமெல்லாம், எழுந்து நடமாடவே யோசித்தபடி இருப்போமோ என்னவோ? இந்த மனிதர் ஒரு ஸ்டன்ட் நடிகர், என்னவெல்லாம் செய்ய அஞ்சுவார்களோ, அத்தனையையும் தன் கடைசி படத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். அதோடு, படத்தில் இசை,எடிட்டிங்,கேமரா என ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துமுடித்திருக்கிறார். 


No comments:

Post a Comment