சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jan 2013

கலைகளை போற்றுவோம்




நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு கைத்தொழில் ஒரு இன்றியமைதாத ஒன்று. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை உனக்கு ஒப்புக்கொள் வரிகள் மறக்கமுடியுமா , மறுக்க முடியுமா ? கற்றதையும் மறக்க கூடாது , கற்றவரையும் ஒதுக்கப்பட கூடாதே.

கோவையில் காந்திபுரம் மையப்பகுதி ஒரு சாக்கடை ஓரமாக மூங்கிலை கட்டுக்கட்டாக பையில் வைத்து கொண்டுவந்து சிறியது சிறியதாக ஒடித்து கொண்டு இருந்தார். திரு. ஜயசீலன் என்பவர் . அவர் எதற்க்காக அப்படி செய்கிறார் அடுத்து என்ன செய்வார் என்பதை கவனிக்கையில் நீண்டநேரம் சுமார் நன்குமநிநேரம் முயற்சிக் முயற்சிக்கு பிறகு அவர் அழகான ஒரு சின்ன மூங்கில் கப்பலை கட்டி முடித்தார் என்ன ஒரு கைவினை அதை வேடிக்கை பார்த்த ஒருவர்என்ன விலை என்றார் இவர் 300 ரூபாய் என்று சொல்ல வாங்க வந்தவர் அந்த அழகிய மூங்கில் கப்பலை 100 ருபாயுக்கும் குறைவாக கேட்டார் எவ்வளவோ போராடியும் கொஞ்சம் சேர்த்து கொடுங்கள் என்று கேட்டும் வேறு வலி இல்லாமல் இறுதியில் வாங்க வந்தவர் சொன்ன விலைக்கே கொடுத்து அனுப்பினர்.


இதை கவனித நான் அவரை அணுகி அவரை பற்றி விசாரித்தேன்அவர் பெயர் ஜயசீலன் கோவை சூலூர் பகுதியில் பிறந்து நான்காம் வகுப்பு வரை படித்ததாகவும் அதன் பிறகு பொருளாதாரம் நிலை காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை. கூலிவேலை செய்து பிழைப்பை ஒட்டி வந்ததாகவும் பெலிக்ஸ் என்பவர் இவருக்கு இந்த கலையை கற்றுக்கொடுத்தது தனக்கு ஒரு வரமாக கருதுகிறார் , இந்த கலையை கொண்டு சாலைகளில் அமர்ந்து வீடு , கப்பல் என செய்து விற்று வருமானத்தை தேடிக்கொள்கிறேன் என்றார் , இவருக்கு மனைவி தங்கமணி, மற்றும் விஜயகுமார் , பிரேம் குமார் என்னும் இரண்டு மகன்கள் அவர்கள் ஒரு தனியார் கம்பெனியில் கூலிவேலைக்கு போகிறார்கள், ஆனாலும் எதுவும் நிரந்தரமில்லாத பணியாக உள்ளது தற்போது கோவையில் நிலவும் மின் வெட்டால் இவர்கல்லால் சரிவர வேலைக்கு போகமுடியாத சூழல் . என்னுடைய இந்த கலையை கொண்டே குடும்பம் உள்ளது,

என்றார் . ஒரு கடையை போல வைக்கலாமே என்றதற்கு அதற்க்கு முதலீடாக குறைந்தது 20000 ஆகுமே என்றார் .அப்படி யாரேனும் வட்டிக்கு கொடுத்தால் கூட கடையில் வரும் வருமானத்தை கொண்டு சிறிது சிறிதாக கடனை அடைத்து விடுவேன் என்றார் .

மேலும் அவரிடம் இந்த கைவினையை கற்றுகொடுக்க குன்களால் முடியுமா என்பதற்கு ஒருமாத காலம் பயிற்சி கொடுக்கலாம் அதற்குள்ளாக இந்த பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்றார் திரு ஜயசீலன் அவருடைய அழகான படைப்புகளை பார்த்து நானும் ஒரு பொருளை வாங்கிவந்தேன் (பேரம் பேசாமல்)

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றன. திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்தான். ஆனால், அந்த திட்டங்கள் பல வெற்றி பெறுவதில்லை. இதற்கு காரணம், இந்த திட்டங்களால் பயனடையும் மக்களுக்கு அதுபற்றிய விவரங்கள் முழுமையாக போய் சென்றடைவதில்லை.

இது போன்று எத்தனையோ கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலையை கற்று வீதிக் உள்ளார்கள் , இவர்கல்ற்க்கேல்லாம் அரசாங்கம் என்ன திட்டங்கள் உள்ளது என்பது தெரிவது இல்லை . இப்படி பட்டவர்களை தேடிபிடித்து அவர்கள் மூலமாக கலைகளை கற்றுக்கொடுக்கலாமே ,

கலைவாணி வீதியில் விடாம காக்கலாமே


இவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா ஜயசீலன் 9698914658

கலைகளை போற்றுவோம் .

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment