சிந்தித்து கூட
பார்க்கவில்லை
உன்னை
சந்திப்பேன்
என்று...!
சந்தித்த
மறுநிமிடமே
என்
சிந்தையில்
நீ
நிறைந்ததை
எப்படி
சொல்வேன்
என்னவென்று...!
ஒவ்வொரு
நொடியிலும்
வானவில்லாய்
தோன்றி என்னை
இம்சிக்கின்றது
உன்
புன்னகை...!
மழை
வருகையை
எதிர்
பார்க்கும்
விவசாயியாய்
உன்
வரவை
எதிர்நோக்கி
காத்திருக்கிறேன்...!
துளியும்
சலனமின்றி
என்னை
கடந்து
செல்கிறாய்
நீ...!
சிறுபிள்ளை
குறும்புகள்
நீ
செய்வதை
பார்க்கையில்
உன்
தலையில்
குட்டி
செல்லமாய்
கோபிக்க
தோன்றுதடி...!
பார்க்கும்
பொழுதினிலும்
கேட்கும்
பொழுதினிலும்
நீ
மட்டும்
என்னுடன்
சற்று
நெருக்கமாய்
தோன்றுதடி..!
உன்
பதில்
கேட்க
விரும்பவில்லை
விரும்புவது,இந்த
சின்ன
சின்ன
சேட்டைகளிலே
என்
உயிர்
உன்னிடம்
எப்போதும்
கேட்க
துடிக்கின்றது,உன்
இதழால்
என்
பெயரினையே...!
No comments:
Post a Comment