சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jan 2013

விஸ்வரூபத்தை அடுத்து மணியின் "கடல் " படத்திற்கு எதிர்ப்பு



மணிரத்தினத்தின் அடுத்த படம் கடல்.இதில் நாயகனாக கார்த்திக்கின் மகன் கௌதமும்,நாயகியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசியும் நடிக்கிறார்கள் .தற்போது யூ டுயுப்பில் இந்த படத்தின் trailer ஓடுகிறது.இதில் நாயகன் நாயகி இருவரும்  முத்த காட்சியில் நடித்துள்ளனர்.தற்போது நாயகியான துளசிக்கு 16 வயது தான் ஆகிறதாம்
 
      இதை கண்டு கொதிப்படைந்த  இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்தக் காட்சி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “உதட்டோடு உதடு முத்தக் காட்சி, இளம் வயதினரைதவறாக காட்டுவதோடு, குழந்தைகளிடத்தில் உண்டாகும் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்துவிடும். உதாரணமாக, எனதுஅழகிபடத்தில் 10 வயது குழந்தைகள் காதல் செய்தால் எப்படி 
இருக்கும் என்றெல்லாம் கூட காட்சி இருந்தது. குழந்தைகளை காதலர்களாக காட்டுகிற காட்சிகள்பரவாயில்லை. அவை அறியாமையுடன் கூடியவையாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் குழந்தைகளை அவ்விதம் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்,” என்றார்

       இதுக்கு நாயகியின் அம்மா முன்னாள் கனவுக்கன்னி ராதா கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி,முத்தக்காட்சியில் நடிப்பதில் தவறில்லை என கூறியுள்ளார்.அவருக்கு பழைய நினைவுகள் "அலைகள் ஓய்வதில்லை " வந்து விட்டது.கார்த்திக்கும் ராதாவும் இணைந்து எவ்ளோ நன்றாக படம் ஓடியது.அது போலவே தன் மகளும் அவர் மகனும் முதன்முதலாக " இணைந்து "நடிக்கும் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும் என நினைத்திருப்பார் போல.ஆனாலும் கௌதம் அப்பாவையே மிஞ்சிடுவார் போல !
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment